காஞ்சிபுரம் கோவிலில் டெஸ்ட் பட ஷூட்டிங்... நயன்தாராவை காண அலைமோதிய மக்கள் கூட்டம் - வைரலாகும் வீடியோ
காஞ்சிபுரத்தில் உள்ள ஜுரகரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சசிகாந்த் இயக்குகிறார். அவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் மாதவன், சித்தார்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.
இதில் ஹீரோயினாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். டெஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் குமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்... கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் ரசிகர்கள் 3 பேர் பரிதாப பலி
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காஞ்சிபுரத்தில் உள்ள ஜுரகரேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாராவும் கலந்துகொண்டார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் நயன்தாராவை காண கோவில் முன் குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ஷூட்டிங் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த நயன்தாரா அங்கு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு கேரவனுக்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நயன்தாரா வந்தபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஜோவிகா வீட்டில் ஆஜரான பிக்பாஸ் Bully Gang... தடபுடலாக பார்ட்டி கொடுத்த வனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்