கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் ரசிகர்கள் 3 பேர் பரிதாப பலி
கேஜிஎப் நாயகன் யாஷின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்றபோது 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் யாஷ். இவர் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வந்தாலும் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது கேஜிஎப் திரைப்படம் தான். அப்படத்தின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் யாஷ். கேஜிஎப் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷுக்கான ரசிகர் வட்டம் பெரிதானது.
நடிகர் யாஷ் அடுத்ததாக டாக்சிக் என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கீத்து மோகன் தாஸ் என்கிற பெண் இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரதீப் பற்றிய கேள்வியால் பதறிப்போன ‘பீனிக்ஸ்’ பூர்ணிமா... அதற்கு அவங்க சொன்ன பதில் இருக்கே..! நீங்களே பாருங்க
இந்த நிலையில், யாஷின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க சென்ற மூன்று ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர். யாஷின் பிறந்தநாளையொட்டி நேற்று இரவு கர்நாடக மாநிலன் கடக் மாவட்டத்தில் யாஷின் ரசிகர்கள் சிலர் அவருக்கு பிரம்மாண்ட கட் அவுட் வைக்க சென்றுள்ளனர். அப்போது அந்த பேனர் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மூன்று ரசிகர்களும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் யாஷின் ரசிகர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாஷின் பிறந்தநாளன்று அவரின் ரசிகர்கள் மூன்று பேர் மரணமடைந்தது கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... 4 கோல்டன் குளோப் விருதுகளை தட்டிதூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன் ஹெய்மர்- வெற்றியாளர்களின் முழு பட்டியல் இதோ