நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு… எச்சரிக்கையை மீறி இயங்கிய வாகனங்களால் ஸ்தம்பித்த சாலைகள்!!
நொய்டா இரட்டை கோபுரம் வெடிவைத்து தகர்க்கப்பட்டதை அடுத்து வாகனங்களின் நெரிசலால் சாலைகள் ஸ்தம்பித்தன.
நொய்டா இரட்டைக் கோபுரம் இடிப்பு:
உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உச்சநீதிமன்றம் அதனை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்டன.
கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றம்:
அதிக மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடங்களில் 40 மாடிகள் உள்ளன. ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை கொண்டு இந்தக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதில் மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டனர். இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படுவதை அடுத்து முன்னதாகவே அந்தக் கட்டிடங்களை சுற்றி உள்ள அனைவரும் அதிகாலையிலேயே அங்கிருந்து வெளியேற்றப்பட்டன.
கரும்புகையால் ஸ்தம்பித்த சாலைகள்:
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படும் போது, 984 அடி உயரம் வரையில் தூசு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, விமான நிலையங்களில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியிலும் அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி சாலைகள் வாகனங்களால் ஸ்தம்பித்து விட்டன.
80 ஆயிரம் டன் குப்பைகள்:
இந்த கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட போது சுற்றியுள்ள வீடுகளில் கரும்புகை வீசியது. இந்த கட்டிடங்களை இடிப்பதற்கு ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை வெடிக்க வைத்ததன் மூலம் ஏற்பட்ட 80 ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற 3 ஆயிரம் லாரிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.