பிக் பாஸ் சீசன் 7.. ரெட் கார்ட் வாங்கிய பிரதீப்.. ஆவேசத்துடன் பேசிய வனிதா விஜயகுமார் - என்ன சொன்னார் தெரியுமா?
Vanitha Vijayakumar about Pradeep : உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே பல போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நடிகர் பிரதீப் ரெட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
Pradeep
பிரபல நடிகர் கவின் அவர்களுடைய நண்பரும், நடிகருமான பிரதீப் ஆண்டனி அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கடுமையான போட்டியாளராகவே நிலவி வந்தார். அதிலும் குறிப்பாக இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை பிரதீப் தான் வெல்ல போகிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தது.
ஆனால் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்தால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் மீது குற்றச்சாட்டுகள் பல எழுந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், அதிரடியாக பிரதீப் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்.
Maya
அதே சமயம் நடிகர் பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட, நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட காரணமாக இருந்தது மாயாவும், பூர்ணிமாவும் தான் என்று பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அதே சமயம் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாகவும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு எதிராகவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Pradeep and Vanita
இந்நிலையில் பிரதீப் அவர்களுக்கு ரெக்கார்ட் கொடுக்கப்பட்டது குறித்து மனம் திறந்த பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் அவர்கள் "பிரதீப் மனரீதியாக பல பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார் என்றும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழித்தேன் என்று கூறுகின்ற பிரதீப், எதிர்காலத்தில் பெண்கள் முன்பு நிர்வாணமாக நின்று என்ன வேண்டுமானாலும் செய்யமாட்டார் என்று என்ன நிச்சயம் என்று கேள்வியை எழுப்பி உள்ளார் வனிதா.