பிக்பாஸ் வீட்டில் வாய்கிழிய பேசும் மாயா... பாலியல் புகாரில் சிக்கியவரா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை மாயா கிருஷ்ணன், பாலியல் புகாரில் சிக்கியது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Maya
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சமூக வலைதளங்களில் இது பேசு பொருள் ஆகி உள்ளதைப் போல் பிக்பாஸ் வீட்டிலும் இந்த பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
Maya Krishnan
மாயாவும் பூர்ணிமாவும் பிளான் பண்ணி பிரதீப்பை வெளியேற்றிவிட்டதாக விசித்ரா குற்றம்சாட்டினார். இதைக்கேட்டு கடுப்பான மாயா, சக போட்டியாளர்களான பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு ஆகியோரை சேர்த்துக் கொண்டு விசித்ராவுடன் சண்டையிட்டனர். அவர் மொத்தமாக வந்தாலும் சிங்கிளாக நின்று அசால்டாக எதிர்கொண்ட விசித்ரா, அவர்களை லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Bigg Boss Maya
விசித்ராவுக்கு ஆதரவாக அர்ச்சனாவும் களத்தில் குதித்ததால் மாயா செய்வதறியாது சிறு பிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இன்று காலை விசித்ராவுக்கு பல் துலக்க பிரஷ்ஷை கொடுக்காமல் ஒளித்து வைத்துக் கொண்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசித்ரா, அவர்களுக்கு சமையல் எதுவும் செய்துகொடுக்காமல் பட்டினி போட்டுவிட்டார். இருதரப்பு மோதலால் பிக்பாஸ் வீடே கலவர பூமியாக மாறி உள்ளது.
Maya Harassment case
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் வாய்கிழிய பேசும் மாயா பாலியல் புகாரில் சிக்கியது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஆடை என்கிற திரைப்படத்தில் நடித்த நடிகை அனன்யா என்பவர் தான் மாயா மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். தான் மாயாவை 2016-ம் ஆண்டு சந்தித்ததாகவும், அப்போது 18 வயது பெண்ணாக இருந்த தன்னிடம் மாயா பல்வேறு ஆலோசனை வழங்கியதாக கூறிய அனன்யா, ஒரு கட்டத்தில் மாயாவுடன் நெருங்கி பழகினாராம்.
Bigg Boss Tamil season 7 contestant Maya
அந்த சமயத்தில் தன் மீது மாயா அதிக கவனம் செலுத்த தொடங்கியதோடு, தன்னிடம் மட்டும் தான் பழக வேண்டும் என கண்டிஷன் போட்டு பிற நண்பர்கள் என்னை வெறுக்கும் படி செய்தார் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மாயா தன்னை அடிக்கடி தவறான முறையில் கட்டிப்பிடித்ததோடு, படுக்கையில் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் அனன்யா தன்னுடைய புகாரில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இது அனைத்தும் பொய் என மாயா விளக்கமளித்திருந்தார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... நாயகன் 2-வா? மருதநாயகமா? புது போஸ்டரை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைத்த Thug Life படக்குழு