பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... இயற்கை அழகை பீட் பண்ணிய இடுப்பழகி! ரம்யா பாண்டியனின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
இயற்கை எழில்மிக்க பண்ணை தோட்டத்தில் சூரியகாந்தி பூக்களுக்கு மத்தியில் புன்னகை பூவாய் மிளிர்ந்த நடிகை ரம்யா பாண்டியனின் அசத்தலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ramya pandian
டம்மி டப்பாசு படம் மூலம் அறிமுகமானாலும் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற ஜோக்கர் படம் மூலம் நடிகையாக பாராட்டுக்களை பெற்றவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்திற்கு பின்னர் சினிமாவில் கவர்ச்சி ரூட்டுக்கு தாவ முடிவெடுத்த ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் போட்டோஷூட் ஒன்றை நடத்தினார்.
Actress ramya pandian
காட்டன் சேலையில், இடுப்பழகை காட்டியபடி கவர்ச்சி ததும்ப ரம்யா பாண்டியன் நடத்திய அந்த மொட்டை மாடி போட்டோஷூட் அவரை சோசியல் மீடியாவில் ஓவர் நைட்டில் பேமஸ் ஆக்கியது. அந்த போட்டோஷூட்டுக்கு பின்னர் அவரை இடுப்பழகி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா.
ramya pandian Photoshoot
மொட்டைமாடி போட்டோஷூட்டுக்கு பின் அவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்னத்திரையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்.
ramya pandian in saree
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய ரம்யா பாண்டியனுக்கு, அந்நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் பைனல் வரை முன்னேறி வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், அவருக்கு அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... எல்லார் கண்ணும் இவங்க மேலதான்... தங்கச்சியின் திருமணத்தில் தகதகவென மின்னிய ரம்யா பாண்டியன் - வைரல் கிளிக்ஸ்
ramya pandian Latest Photos
அந்த வகையில் பிக்பாஸ் முடிந்ததும் சூர்யாவின் தயாரிப்பில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், அடுத்ததாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற மலையாள படத்தில் நடித்தார்.
ramya pandian in ashok selvan wedding
நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற தன் தங்கை கீர்த்தி பாண்டியனின் திருமணத்தில் கலந்துகொண்டார் ரம்யா. அப்போது புதுமண ஜோடி அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் உடன் நடிகை ரம்யா பாண்டியன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
ramya pandian candid click
இந்நிலையில், தற்போது நடிகர் அருண் பாண்டியனின் பண்ணைத்தோட்டத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா. சூரியகாந்தி பூக்களுக்கு மத்தியில் புன்னகை பூவாய் மிளிர்ந்தபடி இயற்கை அழகுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... காதல் டூ கல்யாணம்... களைகட்டிய அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் - வைரலாகும் வீடியோ