ராஷ்மிகாவின் அம்மாவா இது... சும்மா ஹீரோயின் போல இருக்காங்களே? தாயுடன் இருக்கும் நேஷ்னல் கிரஷ்! வைரல் போட்டோ!
நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய அம்மாவின் அழகை அப்படியே உரித்து வைத்துள்ளார். நேஷ்னல் கிரஷ் தற்போது தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட, ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
Rashmika Mandanna
கன்னட திரையுலகின் மூலம், தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் ராஷ்மிகா மந்தனா. ஒரு சில படங்களில் நடித்த பின்னர், முதல் பட ஹீரோவான ரக்ஷித் ஷெட்டியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்த நிலையில், கீதா கோவிந்தம், படம் கொடுத்த வெற்றி திருமணத்தை கேன்சல் செய்து விட்டு மீண்டும் நடிப்பில் இவரை கவனம் செலுத்த வைத்தது.
Rashmika Tamil Movies:
இதை தொடர்ந்து, இவருக்கும் - விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இருவரும் டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்தனர். தெலுங்கு படங்களை தொடர்ந்து தமிழில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா 'சுல்தான்' படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்தார். தற்போது தனுஷின் 51-ஆவது படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Beautiful Actress
தென்னிந்திய மொழிகளை தாண்டி, பாலிவுட் திரையுலகிலும் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா... ரசிகர்களின் நேஷ்னல் கிரஷாக மாறிவிட்டார். மேலும் மிக குறுகிய காலத்தில் பிரபலமான நடிகை என்கிற பெருமையும் ராஷ்மிகாவுக்கு உள்ளது.
Rashmika Mother
தற்போது இவரை நடிக்க வைக்க, பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட காரணம், இவரின் நடிப்பு திறமை என்பது ஒருபுறம் இருந்தாலும்... இவரின் அழகும் முக்கிய காரணம். ராஷ்மிகாவின் மூச்சு முட்ட வைக்கும் அழகை வர்ணிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். இவ்வளவு அழகாக ராஷ்மிகா இருக்க காரணம் அவங்க அம்மாதான் என்பது இப்போது தெரிகிறது. சும்மா ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் உள்ளார். ராஷ்மிகா தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D