தனுஷின் 'ராயன்' படத்தில் பிக்பாஸ் பிரபலம்! மிரட்டலான லுக்கில் வெளியான புதிய போஸ்டர்!
'ராயன்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள, பிக்பாஸ் பிரபலம் குறித்த புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
Dhanush Raayan
'கேப்டன் மில்லர்', படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்காமல், அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தினம் தோறும் சரியாக 6 மணிக்கு இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வருகிறார் தனுஷ்.
அந்த வகையில் ஏற்கனவே, எஸ்.ஜே.சூரியா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோரது பிளாக் அண்ட் வைட் போஸ்டர் வெளியான நிலையில், இதை தொடர்ந்து.. இன்றைய தினம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சரவணனின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் தனுஷ் தினம் தோறும், வெளியிடும் போஸ்டர்கள் அமைந்துள்ளது. இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கூடிய விரைவில்.. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் மற்றும் டீசர், ட்ரைலர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ராயன்' படத்தில் இதுவரை எந்த படத்திலும் நடித்திராத கெட்டப்பில், மொட்டை தலையுடன் தனுஷ் நடித்துள்ளார். இவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அதே போல் தன்னுடைய அண்ணன் செல்வராகவனையும் இப்படத்தில் தனுஷ் நடிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.