வைகாசி விசாகம் 2024 எப்போது..? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ!

இந்த ஆண்டு பழனி கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா மே 16ஆம் தேதி தொடங்க உள்ளது.

vaikasi visakam festival 2024 date and time full details here in tamil mks

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாகும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று 'வைகாசி விசாகம்' திருவிழா ஆகும்.

வைகாசி விசாகம் திருவிழா 2024 எப்போது?
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு 2024 மே 16 ஆம் தேதி வியாழன்கிழமை அன்று ஆரம்பம் ஆகிறது. அந்நாளில், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

சுவாமி வீதி உலா: 
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

இதையும் படிங்க: பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? அப்படினா கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருக்கல்யாணம்:
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. அந்நாளில், மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதனை அடுத்து, மறு நாள் அதாவது மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: முருகப்பெருமானுக்கு ஏன் 2 மனைவிகள்..? சுவாரஸ்யமான காதல் கதை இதோ..!!

கலை நிகழ்ச்சிகள்:
வைகாசி விசாக திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம்:
இதனிடையே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அக்னி நட்சத்திர குழு சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் கடைபிடிக்கப்படும். இந்த நாட்களில் காலை, மாலை என நேரங்களில் பக்தர்கள் பழனி மலையை சுற்றியுள்ள வீதிகளில் கிரிவலம் வருவது வழக்கம். 

அதன்படி, இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திர குழு நேற்று (மே.07) முதல் தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிவலம் வரும் அந்நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து தர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios