பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? அப்படினா கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.