விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்... ஆதிக் உடன் மறுமணத்துக்கு தயாரான பிரபு மகள்..! அவரின் முதல் கணவர் இவரா?
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Adhik, Prabhu, aishwarya
கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது நடிகர் பிரபுவின் மகள் திருமணம் பற்றிய செய்தி தான். அவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வருகிற டிசம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை பிரபுவின் குடும்பத்தார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

Vikram prabhu sister aishwarya
மேலும் ஐஸ்வர்யா பிரபு - ஆதிக் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பிரபு மகளின் முதல் திருமணம் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கி உள்ளன. நடிகர் பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும், விக்ரம் பிரபு என்கிற மகனும் உள்ளனர். இதில் விக்ரம் பிரபு சினிமாவில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
Ajith at aishwarya Prabhu wedding
அதேபோல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவர் குணால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குணால் வேறுயாருமில்லை, நடிகர் பிரபுவின் தங்கை தேன்மொழியின் மகன் தான். இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. சிவாஜி வீட்டு திருமணம் என்பதால் இதில் ஜெயலலிதா தொடங்கி அஜித் வரை எக்கச்சக்கமான பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Adhik Ravichandran aishwarya Prabhu
ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா பிரபுவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. விவாகரத்துக்கு பின் தனக்கு மிகவும் பிடித்த பேக்கிங் தொழிலில் இறங்கினார் ஐஸ்வர்யா. தானே சொந்தமாக கேக் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரின் கேக் தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தான் அவருக்கும் இயக்குனர் ஆதிக்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருக்கிறது.
adhik ravichandran
அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் தான் தற்போது திருமண வேலைகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறதாம். வருகிற டிசம்பர் 15-ந் தேதி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஆதிக் அண்மையில் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சோலோ ஹீரோவாக தடுமாறும் ஜெயம் ரவி! தம்பியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அண்ணன் மோகன் ராஜா போட்ட மாஸ்டர் பிளான்