உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது..! விசித்ரா மீது கடும் கோபத்தில் பூர்ணிமா? வெளியான பரபரப்பு புரோமோ!
பிக்பாஸ் வீடு மீண்டும் இரண்டு அணிகளாக மாறியுள்ள நிலையில், விசித்ராவை மரியாதை குறைவாக பூர்ணிமா பேசியுள்ள புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
BB Tamil 7
கமல்ஹாசனின் முடிவை தாண்டி, பிரதீபுக்கு ரெட் கார்டு வழங்கியதில் உடன்பாடு இல்லாத, அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் ஒன்று திரண்டுள்ள நிலையில், இவர்களை பழிவாங்கும் குணம் கொண்ட பயாஸ்ட் கேப்டானாக மாறி மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் மாயா. குறிப்பாக அர்ச்சனாவை டார்கெட் செய்து விளையாடி வருகிறது புல்லி கேங். அர்ச்சனாவும் என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் இருப்பேன் என, தன்னுடைய ஆட்டத்தை செம்ம ஃபயராக வெளிப்படுத்தி வருகிறார்.
kamalhaasan
அதிலும் குறிப்பாக அர்ச்சனாவை ட்ரிகர் செய்வது போல், ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ஆகியோர் அங்க போய் அழுங்க, பொட்டிய தூக்கிகிட்டு வீட்டுக்கு போங்க, உங்களுக்கு கிளாஸ்ட்ரோ ஃபோமியா இருப்பதாக பொய் சொல்லி இருக்கீங்க என, கொஞ்சம் ஓவராக டார்ச்சர் செய்தனர். அதே போல் பூர்ணிமா வைத்த குற்றச்சாட்டு பொய்யானது என்பதையும், பிரதீப் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் வீடியோவாக எடுத்து போட்டு தாளித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். கமல்ஹாசன் மீதும் இந்த தாக்கம் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.
BB Tamil 7
எனினும், மக்கள் விமர்சனங்களுக்கு செவி சாய்த்து கமல் அடுத்த வாரம், பிரதீப் சர்ச்சை குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், மாயாவிடம் பூர்ணிமா ’விசித்ரா சொன்ன வார்த்தை தன்னை ரொம்ப புண்படுத்தி விட்டதாகவும் இனிமேல் விச்சுவாவது கிச்சுவாவது, அவங்களுக்கு மரியாதையே கிடையாது என்றும் கூறுகிறார். அதன் பிறகு 'நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று மாயா கூற இருவரும் அடுத்த திட்டத்திற்கு தயாராகின்றனர்.
மற்றொருபுறம் அர்ச்சனாவிடம், விசித்ரா... "இங்கே உண்மையான அன்புக்கு இடம் இல்லை, எனக்கு தெரியும், என்னுடைய மனதிற்கு தெரியும் நான் யார் என்று" என சொல்லி புலம்பிக்கொண்டிருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D