கோலிவுட் சினிமா.. ட்ரெண்டாக மாறிய Periodic கதைகள்.. இதே டைப்பில் இன்னும் எத்தனை படம் வரப்போகுது தெரியுமா?
Kollywood Movies with Periodic Stories : நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அல்லாமல் எதிர்காலத்திலோ அல்லது கடந்த காலத்திலோ நடப்பது போன்ற நிகழ்வுகளை கொண்டு அமைக்கப்படும் திரைப்படங்களை தான் பீரியட் பிலிம்ஸ் (Period Film) என்று அழைப்பார்கள்.
Thug Life
இவ்வகை கதைக்களங்களை கையாள்வது சற்று சிரமமான ஒன்று என்பது பலர் அறியாத உண்மை. காரணம், காட்சி மற்றும் கதையமைப்பில் சிறு தவறு ஏற்பட்டாலும் அது முழு திரைக்கதையை கெடுத்துவிடும். கடந்த சில வருடங்களாக கோலிவுட் சினிமாவில் இந்த பீரியாடிக் கதைகள் கொண்ட படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கின்ற பீரியாடிக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
கமல்ஹாசனின் Thug Life
உலக நாயகன் கமல்ஹாசன் சுமார் 36 ஆண்டுகள் கழித்து பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படம் தான் Thug Life. இந்த திரைப்படம் TheThuggee என்கின்ற பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட உள்ள திரைப்படம் என்று கூறப்படுகிறது. சுமார் 1300களில் நடக்கும் கதைக்களமாக இது அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Kanguva
சூர்யாவின் கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்பொழுது பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான் கங்குவா. தமிழகத்தில் வாழ்ந்து பல இன கூட்டங்களை குறிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்த திரைப்படம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை குறிக்கும் வண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thangalaan
விக்ரமின் தங்கலான்
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக விக்ரம் நடிக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க சுரக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம். KGFல் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்கை முறை மற்றும் அவர்கள் சந்தித்த இடையூறுகள் குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Captain Miller
தனுஷின் கேப்டன் மில்லர்
இலங்கை ராணுவத்தில் இருந்த கேப்டன் மில்லர் என்பவருடைய வாழ்கை வரலாற்றை சித்திரிக்கும் படம் இது என்று கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த போர் மற்றும் பிற விஷயங்களை கொண்டு ஒரு Period திரைப்படமாக இது உருவாகியுள்ளது.