ரூ.100 கோடி பத்தாது.. விஜய், ரஜினியை மிஞ்சும் அளவுக்கு அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்- ஷாக் ஆன புஷ்பா 2 படக்குழு!
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
Allu Arjun
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் திரைக்கு வந்த திரைப்படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த பிரிவில் விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் என்கிற சாதனையையும் இதன் மூலம் நிகழ்த்தி இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
Sukumar, Allu Arjun
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைவிட டபுள் மடங்கு அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக பகத் பாசிலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Pushpa 2
புஷ்பா 2 திரைப்படமும் பான் இந்தியா படமாகவே ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதனை மனதில் வைத்து நடிகர் அல்லு அர்ஜுனும் புஷ்பா பட தயாரிப்பாளர்களிடம் முக்கிய டீல் ஒன்றை பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்திற்கு சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டாராம் அல்லு அர்ஜுன்.
Pushpa 2 salary
அதற்கு பதிலாக படத்தின் லாபத்தில் இருந்து 33 சதவீதத்தை தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என டீல் பேசி இருக்கிறாராம். அதன்படி பார்த்தால் புஷ்பா 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூலித்தால் அல்லு அர்ஜுனுக்கு ரூ.330 கோடி சம்பளமாக கிடைக்கும். ஒருவேளை படம் அந்த வசூலை எட்டாவிட்டாலும், இதன் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள் உள்பட ரிலீசுக்கு முன்னர் நடக்கும் பிசினஸ் மூலமே இப்படம் குறைந்தது 800 கோடி வசூலித்து விடும் என கூறப்படுவதால், அல்லு அர்ஜுனுக்கு இப்படம் மூலம் குறைந்தது 250 கோடி சம்பளம் கிடைக்கும் என்பது உறுதி என டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... என் மூஞ்சிலயே குத்திட்டு தப்பி ஓடிட்டான்; வெறித்தனமாக தாக்கிய பிரதீப் ரசிகர்.. வலியால் துடிதுடித்துப்போன வனிதா