ரஜினி மட்டுமில்ல... கமல்ஹாசனுக்கும் மகளாக நடித்திருக்கும் மீனா... இது எப்ப! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்
ரஜினிகாந்துடன் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் நடிகை மீனா, அதைப்பற்றி பார்க்கலாம்.
Kamalhaasan, meena
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமின்றி ஹீரோயினாகவும் கலக்கியவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய படம் என்றால் அது அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் தான். இப்படத்தில் அனாதை இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவளாக இருக்கும் மீணாவை ஒரு தந்தைபோல் பார்த்துக்கொள்வார் ரஜினிகாந்த். இவர்கள் இடையேயான பந்தம் தான் அப்படத்திற்கு பலமாக அமைந்தது.
Avvai shanmugi movie
ரஜினி அங்கிள் என மீனா கூப்பிடும் காட்சிகள் இன்றளவும் பலரது மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும். அப்படி ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னர் எஜமான் திரைப்படத்தின் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என படக்குழுவினர் குழப்பத்தில் இருக்க, இருவரின் கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆனதால், எஜமான் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு கல்யாணம் ஆனா தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் - அதிரடியாக அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை
meena Pair with kamal and Rajini
பின்னர் முத்து, அண்ணாத்த போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் மீனா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த மீனா, மற்றொரு உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் உடன் ஒரே ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதுதான் அவ்வை சண்முகி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
Meena Act as kamalhaasan Daughter n Yaadgaar movie
ஆனால் ரஜினிகாந்தை போல் கமல்ஹாசன் படத்திலும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கும் தகவலை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அப்படத்தில் கமல்ஹாசன் மகளாகவே நடித்திருக்கிறார் மீனா. அந்த படம் தான் யாட்கார், இந்தி படமான இதில் கமல்ஹாசனின் மகளாக நடித்த மீனா, பின்னர் அவ்வை சண்முகி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மம்முட்டி இல்லை.. பிருத்விராஜ் இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் மலையாள நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?