அஜித்.. த்ரிஷா.. அர்ஜுன்.. விறுவிறுப்பாகும் விடாமுயற்சி.. படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு? புட்டு புட்டு வைத்த PRO!
Vidamuyarchi : தல அஜித் கடந்த ஆண்டு உருவாக துவங்கிய திரைப்படம் தான் விடாமுயற்சி, விரைவில் அப்பட பணிகளை அஜித் குமார் முடிக்கவுள்ளார்.
vignesh shivan
முதலில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்க துவங்கிய புகைப்படம் தான் "விடாமுயற்சி". ஆனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.
குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
Magizh Thirumeni
அதன் பிறகு தமிழ் திரையுலகில் நல்ல சில திரைப்படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அந்த திரைப்படம் உருவாக துவங்கியது. ஆனால் ஆறு மாத காலத்திற்கு மேலாக அந்த படம் குறித்து இந்த தகவலும் வெளியாகவில்லை.
Vidamuyarchi Accident
இந்த வருட துவக்கத்தில் மெல்ல மெல்ல விடாமுயற்சி பட அப்டேட்டுகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியான நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் அஜித்குமார். அப்பட பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
Vidamuyarchi Movie
இந்நிலையில் அஜித்குமார் அவர்களுடைய PRO சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூன் 22ம் தேதி அசர்பைஜான் நாட்டுக்கு அஜித் குமார் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் படபிடிகளை துவங்க உள்ளதாகவும், திரிஷா மற்றும் அர்ஜுன் எதிர்வரும் வாரங்களில் படபிடிப்பு இணைவார்கள் என்றும் கூறினார். மேலும் ஜூலை 22 ஆம் தேதி வரை அஜர்பைஜான் நாட்டிலும், அதன் பிறகு 10 நாட்கள் ஹைதராபாத்திலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து, அத்தோடு படப்பிடிப்பு பணிகள் முடிவடையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.