லியோ மட்டுமில்லைங்க... இதற்கு முன் ஆடியோ லாஞ்ச் நடக்காம ரிலீசான விஜய் படங்கள் இத்தனை இருக்கா? முழு விவரம் இதோ
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆகியுள்ள நிலையில், இதற்கு முன் ஆடியோ லாஞ்ச் நடத்தப்படாமல் ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Leo Audio launch cancelled
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட இருந்தது. ஆனால் போலி பாஸ்கள் அடித்து விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்ததால், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டது படக்குழு. அரசியல் அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Thalapathy vijay
விஜய் படங்களுக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே எதிர்பார்ப்பு அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் இருக்கும். ஏனெனில் அதில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்கவே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசி தெறிக்கவிடும் விஜய், தற்போது அரசியல் எண்ட்ரிக்கு தயாராகி வருவதால் லியோ ஆடியோ லாஞ்சில் அவரது அரசியல் பேச்சு அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக அந்த விழாவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
No Audio Launch for Beast
லியோவுக்கு முன் இதுபோன்று ஆடியோ லாஞ்சே நடத்தாமல் 2 விஜய் படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதில் ஒன்று பீஸ்ட். கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வந்தது. அந்த சமயத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக ரசிகர்களின் நலன் கருதி பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என முடிவெடுத்த நடிகர் விஜய், ரிலீசுக்கு முன்னர் நெல்சனுடன் ஒரு நேர்காணல் ஒன்றை மட்டும் நடத்தி இருந்தார்.
No Audio Launch for Bairavaa
அதேபோல் ஆடியோ லாஞ்சே நடக்காமல் ரிலீஸான மற்றொரு விஜய் படம் பைரவா. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதன் காரணமாக இசை வெளியீட்டு விழா நடத்தும் முடிவை கைவிட்டது படக்குழு. இதில் மற்றுமொரு மோசமான செண்டிமெண்ட்டும் ஒளிந்திருக்கிறது. இதுவரை ஆடியோ லாஞ்ச் நடக்காமல் ரிலீசான விஜய்யின் இரண்டு படங்களும் பிளாப் ஆகிவிட்டன. அந்த மோசமான செண்டிமெண்ட்டை லியோ தகர்த்தெறியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... விஜய், அஜித்தெல்லாம் லிஸ்ட்லயே இல்ல பாஸ்! டாப் 10 பணக்கார இந்திய நடிகர்களும்.. அவர்களின் சொத்து மதிப்பும்..!