விஜய், அஜித்தெல்லாம் லிஸ்ட்லயே இல்ல பாஸ்! டாப் 10 பணக்கார இந்திய நடிகர்களும்.. அவர்களின் சொத்து மதிப்பும்..!
இந்தியாவில் உள்ள பணக்கார நடிகர்களின் டாப் 10 பட்டியலில் பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன் லிஸ்ட் இதோ.
top 10 richest actors
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு கோடி கோடியாய் சம்பளம் வாரி வழங்கப்படுவதால் அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக நடிகைகளை விட நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் 10, 20 கோடி சம்பளம் வாங்கிவந்த நடிகர்கள் ஒரு படம் ஹிட் ஆனாலே சம்பளத்தை 50 கோடியாக உயர்த்தி விடுகிறார்கள். அப்படி இருக்கையில் முன்னணி நடிகர்களும் தங்கள் பங்கிற்கு 150, 200 என கோடிகளை குவித்து வருகின்றன. அப்படி கோடி கோடியாய் சம்பளம் வாங்கி அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ள டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான் தான் இந்தியாவிலேயே அதிக சொத்துக்களை கொண்ட நடிகர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 5 ஆயிரத்து 727 கோடியாம். இவர் இந்த ஆண்டு மட்டுமே இரண்டு மெகாஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பதான், ஜவான் இரண்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
அமிதாப் பச்சன்
பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு தற்போது வயது 80 ஆனாலும் இன்றளவும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள அமிதாப் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2950 கோடியாம். இவர் ஒரு படத்துக்கு ரூ.6 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
ஹிருத்திக் ரோஷன்
டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் ஹிருத்திக் ரோஷின். பாலிவுட் திரையுலகில் என்றென்றும் இளமையோடு இருக்கும் ஒரு ஹீரோ என்றால் அது ஹிருத்திக் ரோஷன் தான். இதன் காரணமாகவே இவருக்கு ரசிகைகள் பட்டாளம் அதிகம். இவருக்கு 2 ஆயிரத்து 745 கோடி சொத்து உள்ளதாம். இவர் ஒருபடத்துக்கு ரூ.50 கோடி சம்பளமாக வாங்குவதோடு, லாபத்தில் இருந்து ஷேரும் பெறுகிறார்.
அக்ஷய் குமார்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ஒரு படத்தில் நடிக்க ரூ.25 கோடி சம்பளமாக வாங்கும் அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு ரூ.2591 கோடியாம். இதுதவிர விளம்பரங்களில் நடிக்க நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சல்மான் கான்
டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 5 வது இடத்திலும் பாலிவுட் நடிகர் தான் உள்ளார். அவர் வேறுயாருமல்ல பாலிவுட் மாஸ் நடிகர் சல்மான் கான் தான். இவரின் சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 255 கோடியாம். இவர் ஒரு படத்துக்கு ரூ.70 முதல் 75 கோடி சம்பளமாக வாங்குவதோடு லாபத்திலும் பங்கு வாங்கி வருகிறார்.
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் திறமை வாய்ந்த நடிகரக வலம் வரும் அமீர்கான், டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.50 முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.1562 கோடி இருக்குமாம். விளம்பரங்களில் நடிக்க அமீர்கானுக்கு ரூ.15 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
ராம்சரண்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகனான ராம்சரண், டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இவர் சொந்தமாக விமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1288 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்துக்கு 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
நாகார்ஜுனா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ரூ.950 கோடி சொத்து மதிப்புடன் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு 11 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கினாலும், பிசினஸில் தான் இவருக்கு கோடி கோடியாய் வருமானம் கிடைத்து வருகிறது. இவருக்கு நாக சைதன்யா, அகில் என இரு மகன்கள் உள்ளனர்.
ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரு.410 கோடி இருக்குமாம். இவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். இவர் விளம்பரங்களில் நடிப்பதில்லை.
கமல்ஹாசன்
டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளவர் நம் உலகநாயகன் கமல்ஹாசன் தான். சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்த இவர் சினிமாவில் தயாரிப்பாளராகவும் கொடிகட்டி பறந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.388 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... தலைவருக்கே தண்ணிகாட்டும் தளபதி! ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லியோ