தலைவருக்கே தண்ணிகாட்டும் தளபதி! ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய லியோ
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஜெயிலர் திரைப்படம் ஜெர்மனியில் வசூலித்த ஒட்டுமொத்த கலெக்ஷனையும் லியோ படம் முன்பதிவிலேயே முறியடித்து உள்ளது.
Leo vs Jailer
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்தது. நெல்சன் இயக்கிய இப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். அதிரிபுதிரியான வெற்றியை ருசித்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. ஜெயிலர் படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்த்தி உள்ள பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை எல்லாம் முறியடிக்கவே முடியாது என ரஜினி ரசிகர்கள் மார்தட்டி வந்தனர்.
Leo vijay
ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரிலீசுக்கு முன்னதாகவே நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஜெயிலர் பட வசூல் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடிக்க தொடங்கி உள்ளது. லியோ படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் ரிலீசாகும் 6 வரத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் அதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் டிக்கெட்டுகளும் மளமளவென விற்பனை ஆகின.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lokesh kanagaraj, vijay
அந்த வகையில் இங்கிலாந்தில் ஜெயிலர் படம் மொத்தமாக செய்த வசூலை ரிலீசுக்கு முன்னதாகவே ஜெயிலர் படம் கடந்துவிட்டது. இதற்கு அடுத்தபடியாக தற்போது ஜெர்மனியிலும் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் முறியடித்து உள்ளது. ஜெர்மனியில் மட்டும் தற்போது வரை 2500-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாம். இதன்மூலம் 68 ஆயிரத்து 500 யூரோக்களை லியோ படம் வசூலித்து உள்ளது.
leo pre booking in germany
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மொத்தமாகவே ஜெர்மனியில் 66 ஆயிரத்து 141 யூரோக்களை மட்டுமே வசூலித்து இருந்தது. இதன்மூலம் முன்பதிவிலேயே ஜெர்மனியில் ஜெயிலர் பட வசூல் சாதனையை கெத்தாகா அடிச்சு தூக்கி இருக்கிறது லியோ. ஜெர்மனியில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை பொன்னியின் செல்வன் படத்துள்ளது. அப்படம் 1 லட்சத்து 53 ஆயிரம் யூரோக்களை வசூலித்து உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கமலின் விக்ரம் படம் உள்ளது. லியோ தற்போதைய நிலவரப்படி மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படம் ரிலீசானதும் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் பாட்ஷாவை பதம் பார்க்க தயாரான பிரபாஸ் - அதகளமாக வெளிவந்த சலார் படத்தின் புது ரிலீஸ் தேதி இதோ