மீண்டும் அலப்பறை கிளப்ப வரும் நெல்சன்.. உறுதியானது ஜெயிலர் 2 - திரைக்கதை அமைக்கும் பணி துவங்கியாச்சாம்!
Jailer 2 Loading : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் தான் நெல்சனின் ஜெயிலர்.
Director Nelson
கடமை 2018 ஆம் ஆண்டு வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் "கோலமாவு கோகிலா" என்ற திரைப்படத்தின் மூலம் எழுத்தாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் நெல்சன் திலிப் குமார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வெகு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார் என்றாலும் கூட, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இவர் பெற்றுள்ளார்.
Super Star Rajinikanth
கடந்த 2021 ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான "டாக்டர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அதற்கு அடுத்த ஆண்டு பிரபல நடிகர் தளபதி விஜய் அவர்களை வைத்து "பீஸ்ட்" என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார் நெல்சன் திலீப் குமார். இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய திரைப்படமாக இது மாறியது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன் திலீப் குமார்.
Jailer 2 Movie
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் 600 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்த வெகு சில திரைப்படங்களில் ஒன்றாக மாறியது ஜெயிலர் திரைப்படம். இந்திய சினிமாவில் உள்ள பல்வேறு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்பொழுது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை நெல்சன் துவங்கி உள்ளதாகவும், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாக உள்ள தனது 171-வது திரைப்படத்தை முடித்த பிறகு தனது 172வது படமாக நெல்சனின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.