MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கலக்கலான காமெடி படங்களை இயக்கி கல்லாகட்டிய இயக்குனர் சுந்தர் சி இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

கலக்கலான காமெடி படங்களை இயக்கி கல்லாகட்டிய இயக்குனர் சுந்தர் சி இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

இயக்குனர் சுந்தர் சி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பர்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 21 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sundar C

Sundar C

30 ஆண்டுகளாக கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக கோலோச்சி வருபவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஜெயராம், குஷ்பு நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு திரைக்கு வந்த முறைமாமன் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. இதையடுத்து இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அவரது சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Sundar C, Khushbu

Sundar C, Khushbu

கோலிவுட்டில் ஜாம்பவான் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் படங்களை இயக்கிய வெகு சில இயக்குனர்களுள் சுந்தர் சி-யும் ஒருவர். ரஜினியை வைத்து அவர் இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. மறுபுறம் கமலை வைத்து அன்பே சிவம் என்கிற கிளாசிக் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

36
Sundar C wife khushbu

Sundar C wife khushbu

சுந்தர் சி என்றாலே அவரது படத்தில் நிச்சயம் காமெடி இருக்கும் என கியாரண்டியாக சொல்லும் அளவுக்கு காமெடியில் தான் ஒரு கிங் என்பதை தன்னுடைய கலகலப்பு, வின்னர், அரண்மனை, ஆம்பள போன்ற படங்களே சாட்சி. இப்படி இயக்குனராக பல்வேறு முத்திரகளை பதித்த சுந்தர் சி, கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆன தலைநகரம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வேறலெவல் ஹிட் அடித்ததால் டைரக்‌ஷனுக்கு ரெஸ்ட் விட்டு முழுநேர நடிகரானார்.

இதையும் படியுங்கள்... என் மாமியாரின் கனவை நனவாக்கிய பிரதமருக்கு கோடான கோடி நன்றி - மோடியின் செயலால் நெகிழ்ந்த குஷ்பு

46
Sundar C Birthday

Sundar C Birthday

சுமார் 6 ஆண்டுகள் அவர் ஹீரோவாக நடித்த நிலையில், தலைநகரம் படம் அளவுக்கு வேறு எந்த படமும் கிளிக் ஆகாததால் மீண்டும் டைரக்‌ஷன் பக்கம் திரும்பினார். அரண்மனை என்கிற பேய் படத்தை திகில் கலந்த காமெடி கதையம்சத்துடன் இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி. இதுவரை அப்படத்தின் மூன்று பாகங்களை இயக்கிவிட்டார். தற்போது நான்காம் பாகமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார்.

56
Sundar C Networth

Sundar C Networth

தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் இயக்குனராக ரூ.3 முதல் ரூ.4 கோடியும், நடிகராக நடிக்க ரூ.1 அல்லது 2 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

66
Sundar C salary

Sundar C salary

இதுதவிர தன் மனைவி குஷ்பு உடன் சேர்ந்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் சுந்தர் சி. அந்நிறுவனம் மூலம் நான் சிரித்தால், நட்பே துணை, மீசைய முறுக்கு, அரண்மனை 2 போன்ற வெற்றிப்படங்களை தயாரித்து அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். ஆடி, பிஎம்டபுள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்துள்ள சுந்தர் சி-க்கு சொந்தமாக சென்னையில் பங்களா வீடு ஒன்றும் இருக்கிறது. இதுதவிர அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்...  சந்தியா ராகம் சீரியலின் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் அதிரடியாக மாற்றம் - இனி ஹீரோயினாக நடிக்கப்போவது இவரா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குனர் சுந்தர் சி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved