Savukku: சவுக்கு சங்கரை விடாமல் துரத்தும் புகார்.!!ஒரே நாளில் பதிவான அடுத்தடுத்த வழக்கால் உறுதியாகும் குண்டாஸ்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுடியூப்பர் சவுக்கு சங்கர் மீது மேலும் 4 வழக்குகள் கைது செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

As successive cases have been registered against SavkKu Shankar there is a possibility that he will be arrested under the Guntas Act soon KAK

சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துக்கள்

யுடியூப்பர் சவுக்கு சங்கர் அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து ஒருமையில் விமர்சனம் செய்து வந்தார்.  இந்த சூழ்நிலையில் பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் யுடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக கூறியும் தேனி போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சவுக்கு சங்கர் மீது சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்துள்ள புகார் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவில் சவுக்கு சங்கர் மற்றும் Redpix youtube பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

As successive cases have been registered against SavkKu Shankar there is a possibility that he will be arrested under the Guntas Act soon KAK

அடுத்தடுத்து பதிவான வழக்குகள்

தமிழக பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசியதாக தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத்தலைவர் வீரலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் Redpix youtube சேனல் ஆகியோர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 155/ 2024 பிரிவு 294b, 506 (1) ஐபிசி சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதே போல ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் அளித்துள்ள புகார் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

As successive cases have been registered against SavkKu Shankar there is a possibility that he will be arrested under the Guntas Act soon KAK

குண்டாஸ் சட்டத்தில் கைது.?

என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மாநகர குற்ற பிரிவில் அளித்த புகார் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு குற்ற எண் 154/24 பிரிவு 294b, 354 d, 506(1), 509 IPC மற்றும் பிரிவு 4 TNPHW சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்படுகிறது. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் விரைவில் வெளியே வரமுடியாதபடி குண்டாஸ் சட்டம் பாய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கை உடைஞ்சு போச்சு.. ஜெயிலில் காயங்களுடன் இருக்கும் சவுக்கு சங்கர்.. பகீர் கிளப்பிய சவுக்கு சங்கர் வழக்கறிஞர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios