- Home
- Gallery
- சந்தியா ராகம் சீரியலின் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் அதிரடியாக மாற்றம் - இனி ஹீரோயினாக நடிக்கப்போவது இவரா?
சந்தியா ராகம் சீரியலின் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் அதிரடியாக மாற்றம் - இனி ஹீரோயினாக நடிக்கப்போவது இவரா?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலான சந்தியா ராகம் தொடரில் இருந்து நாயகி தாரா விலகி உள்ளதால் அவருக்கு பதில் வேறு நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.

sandhya raagam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலேஜ்க்கு போன முதல் நாளே மாயா ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்.
sandhya raagam serial heroine changed
அவளுக்கு ஆதரவாக மொத்த மாணவிகளும் போராட்டத்தில் குதிக்க, கோபத்துடன் காலேஜ் வந்த ரகுராம் திடீரென மாயாவுக்கு ஆதராவாக பேசி ட்விஸ்ட் கொடுத்தார். இதனால் அடுத்து என்ன நடக்கும்? மாயா ரகுராம் இடையேயான உறவு வலுப்படுமா என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சந்தியா ராகம் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய சீரியல் 'நினைத்தேன் வந்தாய்.'! மாற்றப்படும் ஜீ தமிழ் தொடர்களின் நேரம்!
sandhya raagam serial Tara
இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவலும் கிடைத்துள்ளது, அதாவது டைம் மட்டுமில்ல இந்த சீரியலின் நாயகிகளில் ஒருவரும் மாற்றப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களால் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
sandhya raagam serial New Heroine Bhavana Lasya
இனி அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா என்பவர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாராவுக்கு பதிலாக தனம் கதாபாத்திரத்தில் பாவனா லஸ்யா இடம் பெறும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை பாவனா லஸ்யா தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக கிளம்பி சென்ற தனுஷ், ரஜினி