பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க காத்திருக்கும் பான் இந்தியா ஸ்டார்ஸ்.. டிசம்பர் மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீசா?
நயன்தாரா நடித்த அன்னபூரணி முதல் பிரபாஸின் பிரம்மாண்ட படமான சலார் வரை டிசம்பர் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ள படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
December release movies
2023-ம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது. இந்த வருடம் எக்கச்சக்கமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், இந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் ஏராளமான பான் இந்தியா படங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசையாக வெளிவர காத்திருக்கின்றன. அதன் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் 1
டிசம்பர் மாதத்தின் முதல் நாளிலேயே தமிழில் நயன்தாரா நடித்த அன்னபூரணி, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங், பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இதுமட்டுமின்றி ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் நடித்துள்ள பான் இந்தியா படமான அனிமலும் இந்த நாளில் திரை காண உள்ளன. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார்.
டிசம்பர் 8
டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடித்துள்ள காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடன் கமல்ஹாசனின் மாஸ் திரைப்படமான ஆளவந்தானும், ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப்படமான முத்துவும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. இதுதவிர நானி, மிருணாள் தாக்கூர் நடித்த ஹாய் நானா படமும் அன்றைய தினம் திரைக்கு வர உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
டிசம்பர் 15
டிசம்பர் மாதம் 15-ந் தேதி தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக நடித்தது மட்டுமின்றி ரியல் லைஃபிலும் காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஆகியோரின் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. அசோக் செல்வன் மூன்று ஹீரோயின்களுடன் நடித்த சபா நாயகன் திரைப்படமும், கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ள கண்ணகி படமும் அன்று திரைகாண உள்ளது.
டிசம்பர் 22
டிசம்பர் 22 மிகவும் ஸ்பெஷலான நாள், ஏனெனில் அது கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருவதால் அன்றைய தினம் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன. தமிழில் ஜெயம் ரவி நடித்த சைரன் படம் அன்றைய தினம் திரைக்கு வர உள்ளது. அதேபோல் பிரபாஸின் பான் இந்தியா படமான சலாரும், ஷாருக்கானின் பான் இந்தியா படமான டுங்கியும் அன்றைய தினம் ரிலீஸ் ஆக உள்ளன.
இதையும் படியுங்கள்... அன்னபூரணி முதல் பார்க்கிங் வரை... டிசம்பர் 1-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?