அன்னபூரணி முதல் பார்க்கிங் வரை... டிசம்பர் 1-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?
டிசம்பர் 1-ந் தேதி தமிழ் சினிமாவில் திரையரங்கம் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய எக்கச்சக்கமான தமிழ் படங்கள் காத்திருக்கும் நிலையில் அதன் லிஸ்ட்டை பார்க்கலாம்.

Theatre and OTT release tamil movies on December 1
2023ம் ஆண்டு நிறைவடைய ஒரு மாதமே உள்ளது. டிசம்பர் மாதத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதுவும் டிசம்பர் 1-ந் தேதி தமிழில் அரை டஜன் படங்கள் ரிலீசாக உள்ளன. அன்றைய தினம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அன்னபூரணி
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1-ந் தேதி ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், பிக்பாஸ் பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது நயனின் 75-வது படமாகும்.
பார்க்கிங்
பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படமும் டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார். பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
அனிமல்
டிசம்பர் 1-ந் தேதி ரிலீசாகும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் அனிமல். ரன்பீர் கபூர் நடித்துள்ள இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளார். இவர் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். பான் இந்தியா படமான இதில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாடு
எங்கேயும் எப்போதும் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் நாடு. இப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷன் தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சூரகன்
கார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சூரகன். இப்படத்தை சதீஷ் கீதா குமார் இயக்கி உள்ளார். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சுதர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படமும் டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸாக உள்ளது.
தூதா
நாக சைதன்யா நடித்துள்ள தூதா என்கிற வெப்தொடர் டிசம்பர் 1-ந் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த வெப்தொடரை விக்ரம் கே குமார் இயக்கி உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடித்த 24 படத்தை இயக்கியவர் ஆவார். இந்த வெப் தொடரில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தங்கலான் பட நடிகை பார்வதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் முதல் படம்... பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!