MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் முதல் படம்... பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் முதல் படம்... பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பூர்ணிமா, சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் இணைந்து நடித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 28 2023, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
poornima

poornima

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் பூர்ணிமா ரவியும் ஒருவர். இவர் யூடியூப் மூலம் பிரபலம் ஆனவர் ஆவார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் கண்டெண்ட் குயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த சீசனில் அதிகளவில் சண்டையிட்ட போட்டியாளரும் பூர்ணிமா தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
poornima acted with Nayanthara

poornima acted with Nayanthara

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தான் நடித்த படங்கள் பற்றி வாய்த்திறக்காமல் இருந்தாலும், தற்போது அவர் முதன்முறையாக நடிகை நயன்தாரா உடன் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி படத்தில் பூர்ணிமாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்தின் டிரைலரில் ஒரு காட்சியில் நயன்தாரா அருகே பூர்ணிமா இருப்பதை பார்த்த பின்னர் தான் அவர் இப்படத்தில் நடித்துள்ளதே ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
BiggBoss poornima

BiggBoss poornima

பூர்ணிமாவுக்கு கிடைத்த இந்த ஜாக்பாட் வாய்ப்பை பற்றி தான் பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது பேசி வருகின்றனர். மேலும் நயன்தாரா உடன் நடித்துள்ள பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. பூர்ணிமா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இப்படம் டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆவது பூர்ணிமாவுக்கு தெரியாது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

44
Annapoorani movie poster

Annapoorani movie poster

அன்னபூரணி திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார் இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, சத்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Annapoorani: பிடிச்சத பண்ணுனா.. லட்சம் பேருமே சூப்பர் ஸ்டார் தான்! வெளியானது நயன்தாராவின் 'அன்னபூரணி' ட்ரைலர்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved