MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என்னோட வெற்றிக்கு பின்னாடி என் கணவர் இருக்கிறார்... விக்கி பற்றி பேசுகையில் வெட்கத்தில் முகம் சிவந்த நயன்தாரா

என்னோட வெற்றிக்கு பின்னாடி என் கணவர் இருக்கிறார்... விக்கி பற்றி பேசுகையில் வெட்கத்தில் முகம் சிவந்த நயன்தாரா

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி பேசுகையில் எமோஷனல் ஆகி மேடையிலேயே கண் கலங்கினார்.

2 Min read
Ganesh A
Published : Jan 10 2024, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து சினிமாவை தாண்டி பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 9ஸ்கின் என்கிற சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கிய இவர்கள், பின்னர் டிவைன் புட்ஸ் என்கிற விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்திலும் பங்குதாரராக இணைந்தனர். இதையடுத்து பெமி9 என்கிற நாப்கின் பிராண்டையும் தொடங்கினர். அந்த பிராண்ட் இன்று அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் வந்து கலந்துகொண்டு பேசினார். அப்போது விக்னேஷ் சிவன் பற்றி பேசுகையில் எமோஷனல் ஆன நயன்தாரா மேடையிலேயே கண் கலங்கினார்.

24

அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசியதாவது : “ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கனு எப்பவுமே சொல்வாங்க. ஆனால் இன்றைக்கு மிகவும் சக்சஸ்புல்லாவும், ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும் எல்லா பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பா ஒரு ஆண் இருக்காங்க. என் கணவரை என்னைக்கு நான் சந்தித்தேனோ அன்றையில் இருந்து நான் இன்னும் என்னென்ன விஷயங்கள் பண்ணவேண்டும் என்று தான் அவர் எனக்கு கத்துக்கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... விடுதலையான சௌந்தரபாண்டி.. ஷண்முகத்தை பழிவாங்க பாண்டியம்மா போடும் பிளான் - அண்ணா சீரியல் அப்டேட்

34

நீங்க ஏன் இது பண்றீங்கனு என்னைக்குமே கேள்வி கேட்டதில்லை. அவரை சந்திக்கும் முன் வரை யாரும் நம்மை கேள்வி கேட்கவில்லை என்றால் அது மிகப்பெரிய விஷயம் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு இவ்வளவு தகுதி இருந்தும் நீங்க ஏன் சில விஷயங்களை செய்ய மாட்டேங்குறீங்க, நீங்க ஏன் இது பண்ணக்கூடாது என அவர் கேட்பார்.

44

இன்றைக்கு பெமி9 என்கிற பிராண்ட் உருவானதற்கு நான் காரணம் அல்ல. சமூக பொறுப்புடன் இப்படி ஒரு விஷயம் நாம் செய்ய வேண்டும் என சொல்லி, இப்படி ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தியதற்கு காரணம் அவர் தான் என தன் கணவர் விக்னேஷ் சிவனை பற்றி பெருமையாக பேசி நன்றி கூறிய நயன்தாரா. இறுதியாக சபரி மலைக்கு மாலைபோட்டிருக்கும் தன் கணவர் விக்னேஷ் சிவனை பார்த்து சாமி சரணம் என சொல்லி தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்... இறைவன் படத்தின் படுதோல்வி எதிரொலி... அடுத்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்கிறாரா ஜெயம் ரவி?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
சேலம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved