- Home
- Gallery
- களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக கலந்துகொண்டு அசத்திய விஜய் டிவி பிரபலங்கள்
களைகட்டிய நவராத்திரி கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக கலந்துகொண்டு அசத்திய விஜய் டிவி பிரபலங்கள்
தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் விஜய் டிவியின் நவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர். திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து இந்த ஆண்டு நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். இந்த நவராத்திரி விழாவில் சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் அக்டோபர் 15ந் தேதியும், சென்னையில் அக்டோபர் 16ம் தேதியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023 திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023 , தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023 , மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... பூர்ணிமா vs விஷ்ணு மோதல்... ஒரே ஒரு காபியால் கலவர பூமியான பிக்பாஸ் வீடு...!