திரிஷா குறித்து கொச்சை பேச்சு... மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Trisha, Mansoor Alikhan
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷாவுக்கு வயது 40 ஐ நெருங்கிவிட்டாலும், இன்றளவும் அவருக்கான மவுசு கோலிவுட்டில் குறையவில்லை. அவர் கைவசம் கமலின் தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி போன்ற பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இதுதவிர இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த லியோ திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Trisha vs Mansoor Alikhan
லியோ படத்தின் வெற்றியால் செம்ம ஹாப்பியாக இருந்த நடிகை திரிஷாவுக்கு, அப்படத்தில் நடித்த நடிகரே தற்போது தலைவலியாக மாறி இருக்கிறார். லியோ படத்தில் இருதயராஜ் டிசோஸா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான், நடிகை திரிஷா உடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் இல்லாதது குறித்து பேட்டி ஒன்றில் கொச்சையாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Mansoor Alikhan bad comments
இந்த வீடியோவை பார்த்து கடுப்பான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு செருப்படி ரிப்ளை கொடுத்தார். இதற்கு விளக்கம் அளித்த மன்சூர் அலிகான் மன்னிப்பும் கேட்க மறுத்துவிட்டார். இதனால் பூதாகரமாக வெடித்தது இந்த பிரச்சனை. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகைகள் குஷ்பு, ரோஜா, மாளவிகா மோகனன் என ஏராளமான நடிகர், நடிகைகள் மன்சூர்ய் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
Action against mansoor alikhan
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான்... தப்பிப்பாரா தீபா? கார்த்திகை தீபம் சீரியலின் விறுவிறு அப்டேட்