Myna Nandhini: கணவர் பிறந்தநாளுக்கு பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மைனா நந்தினி!
நடிகை மைனா நந்தினி, தன்னுடைய கணவர் யோகேஸ்வரன் பிறந்தநாளுக்கு, அவருக்கு மிகவும் பிடித்த ஜாகுவார் காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் மைனா நந்தினி. இதை தொடர்ந்து இவர் நடித்த வம்சம், மின்சாரம் போன்ற படங்கள் இவருக்கு கைகொடுக்காத நிலையில், சமையல் மாத்திரம் என்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார்.
பின்ன சின்னத்திரையில் ஒளிபரப்பான அழகி, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி, மருதாணி போன்ற தொடர்களில் நடித்தாலும்... இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் தான்.
இந்துவை அழிக்க மனோகரி செய்த மாந்திரீகம் ..! மயங்கி விழுந்த கவின் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!
இந்த சீரியல் மைனாவின் கேரியரில் மிக முக்கியமானதாக மாறிய நிலையில்.. மெல்ல மெல்ல சின்னத்திரையில் படு பிஸியான பிரபலமாக மாறினார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிலும் பங்கேற்ற மைனா மூன்றாவது ரன்னரப்பாக வெளியேறினார்.
மைனாவின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றியது இவரின் முதல் கணவர் கார்த்திகேயனின் மரணம். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கும் ஆளான நந்தினி அதில் இருந்து மீண்டு வருவதற்கே ஒரு வருடத்திற்கும் மேல் ஆனது. இதை தொடர்ந்து தன்னுடைய தம்பியின் நண்பரும், நடிகருமான யோகேஸ்வரனை காதலித்து 2019-ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். மைனா நந்தினி தன்னுடைய இரண்டாவது கணவரான யோகேஸ்வரன் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், அவருக்கு மிகவும் பிடித்த ஜாகுவார் கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளர். இதன் விலை 70 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது, இதை பார்த்து யோகி ஒரு நிமிடம் கண் கலங்கி தன்னுடைய காதலோடு நந்தினியை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோ மற்றும் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.