Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்துவை அழிக்க மனோகரி செய்த மாந்திரீகம் ..! மயங்கி விழுந்த கவின் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

இந்துவை அழிக்க மனோகரி செய்த மாந்திரீகம் ..! மயங்கி விழுந்த கவின் - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வி ஏற்பாடு செய்த போலி சாமியார் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

manimegalai a | Published : Jun 12 2024, 06:34 PM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Asianet Image

அதாவது, போலி சாமியார் பேயை ஓட்டுவதாக சொல்லி ரூம் ரூமாக்ஸ் சென்று திருட்டு வேலைகளை செய்ய இதை கவின் பார்த்து விடுகிறான், என்ன திருடுனீங்க என்று கேட்க அந்த சாமியார் கவினை அடிக்க அவன் மயங்கி விழ அங்கிருந்து இந்துவின் ஆவிக்கு சக்தி வந்து சாமியாரை அடித்து துரத்த சத்தம் கேட்டு மனோகரியும் செல்வியும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையெல்லாம் பேயோட வேலை என்று பயப்படுகின்றனர். 

24
Asianet Image

இதையடுத்து மனோகரி உண்மையான சாமியார் ஒருவரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் நீ எதோ தப்பு பண்ணி இருக்க, உன்னால இந்த உலகத்தை விட்டு போனது திரும்ப வந்து இருக்கு. அது பழி தீர்க்காமல் போகாது என்று சொல்லி கொஞ்சம் மஞ்சளையும் எலுமிச்சை பழத்தையும் கொடுத்து ஒரு பூஜையை செய்தால் அந்த ஆத்மாவால் வீட்டிற்குள் வர முடியாது என்று சொல்கிறார். 

Ambani Family Drink Milk: அம்பானி குடும்பம் குடிக்கிற பால்கூட அரியவகை தானாம்! ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

34
Asianet Image

அதே சமயம் இந்த மஞ்சளை அந்த ஆவியோடு ரத்த சம்மந்தம் இருக்கவங்க யாரும் தொட கூடாது என்றும் சொல்லி கொடுத்து அனுப்ப வீட்டிற்கு வந்த மனோகரி பூஜைக்கான வேலையை தொடங்குகிறாள். ரூமில் எழில் இந்து ஞாபகத்தில் கலங்கி அழுகிறான். இந்துவின் ஆவி அவனை கட்டியணைக்க அதை உணரும் எழில்  நீ இங்க தான் இருக்க இந்து வெளியில் வந்து தேடி அலைய மழையில் நனைந்து விடுகிறான். 

44
Asianet Image

அதற்குள் மனோகரி பூஜையை முடித்து பானையையும் மஞ்சளையும் சாமியார் சொன்னது போல் வைத்து விட இந்துவால் வீட்டிற்குள் நுழைய முடியாமல் போகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பிரேம்ஜி மீது அப்படி என்ன வெறுப்பு! திருமணத்திற்கு யுவன் குடும்பம் வராததன் பின்னணி இதுவா? பிரபலம் கூறிய தகவல்!

manimegalai a
About the Author
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார். Read More...
தமிழ் சீரியல்
 
Recommended Stories
Top Stories