Thaman Net Worth: 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இசை இளவரசர்! இசையமைப்பாளர் தமனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா
நடிகராக அறிமுகமாகி, முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ள தமன், இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
music director thaman
ஆந்திராவைச் சேர்ந்த தமன், ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் பழம்பெறும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கண்டசாலா பாலராமய்யாவின் பேரன் ஆவார். இவருடைய தந்தை கண்டசாலா சிவகுமார் டிரம்ஸ் இசை கலைஞர். பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.
இவரது சகோதரி யாமினி கண்டசாலா, தெலுங்கு திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக உள்ளார். இவரின் குடும்பமே ஒரு இசை குடும்பம் எனலாம். சிறு வயதில் இருந்தே, இவர் இசை கற்று வந்தாலும்.. முதலில் சினிமாவில் ஒரு நடிகராக தான் என்ட்ரி கொடுத்தார்.
2003 ஆம் ஆண்டு, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிக்க வந்த 'பாய்ஸ்' பட வாய்ப்பு ஏற்றுக் கொண்ட, இவர் இந்த படத்தில் சித்தார்த்தின் நண்பனாக கிருஷ்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சிந்தனை செய், அய்யனார், மிஸ்டர் மஜ்னு, சூரியவன்ஷி, போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு, தெலுங்கில் இவர் இசையமைத்த மல்லி மல்லி திரைப்படம் தமனுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே பல படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக தமிழில் சிந்தனை செய், ஈரம், தில்லாலங்கடி, மாஸ்கோவின் காவிரி, அய்யனார், போன்ற படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான வாரிசு படம் வரை இவற்றின் இசை தான் திரையரங்குகளில் பட்டையை கிளைப்பியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதிலும் வாரிசு படத்தில் இவர் இசையில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே, ஜிமிக்கி ஜிமிக்கி, போன்ற பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்தன. தெலுங்கியிலும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், சிரஞ்சீவி, என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் தமன்.
அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் மகேஷ் பாபுவின் குண்டூர் காராம், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர், பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் og, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 75 வது படமான அன்னபூரணி, ரவி தேஜாவின் 4ஜிஎம், ரசவாதி ஆகிய படங்கள் உள்ளன.
மிகக் குறுகிய காலத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, இசை இளவரசராக வலம் வரும் தமன் இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு படத்திற்கு இசையமைக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறும் தமன், அது தவிர சில ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் மாத மாதம் 10 முதல் 15 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் ஸ்டுடியோ, வீடு ஆகியவை உள்ளது. அதை போல் ஆந்திர மாநிலத்திலும் இவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு, உள்ளது. சில சொகுசு கார்கள் வைத்துள்ள தமன் வருடத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறுவார் என தெரிகிறது. மேலும் இவரின் சொத்து மதிப்பு என பார்த்தால், 50 முதல் 70 கோடி வரை சொத்துக்கள் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பிக்பாஸ் வீட்டில் முளைத்த புது காதல்! பீலிங்கை ஓப்பனாக கூறிய பெண் போட்டியாளர்.. பரபரப்பான புரோமோ!