- Home
- Gallery
- உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது? A, B, C, D என்ற எழுத்து எதை குறிக்கிறது தெரியுமா?
உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது? A, B, C, D என்ற எழுத்து எதை குறிக்கிறது தெரியுமா?
பெரும்பாலான வீட்டில் கேஸ் சிலிண்டர்கள் நமது அன்றாட வாழ்வின் முக்கிய பங்காற்றி வருகிறது. அதை பயன்படுத்தும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிர் பலி ஏற்படும்.

LPG Gas Cylinder
இன்றைய காலகட்டத்தில் விறகு அடுப்பை விட பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படும் நிகழ்வு அவ்வப்போது ஏற்படுகிறது. மக்கள் பொதுவாக கேஸ் சிலிண்டர் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்தாததால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கிறது.
Cylinder
குறிப்பாக, காலாவதியான சிலிண்டர்களால் தான் சிலிண்டர் விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உங்களிடம் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? போன்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
LPG Gas
எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பட்டவை. ஆனால், கேஸ் சிலிண்டர்களில் உள்ள தலை பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் இதில் மிக முக்கியமானது. அதில், A, B, C, D ஆகியவை உடன் எண்ணும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு எழுத்தும் ஒரு வருடத்தின் கால் பகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிலிண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள A என்ற எழுத்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், B என்ற எழுத்து ஏப்ரல், மே, ஜூன் என்ற அடுத்த மூன்று மாதங்களையும், C என்ற எழுத்து ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களையும், D என்ற எழுத்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களையும் குறிக்கிறது.
Numbers printed
அதாவது உங்கள் சிலிண்டரில் A.24 என்று எழுதப்பட்டிருந்தால், உங்கள் சிலிண்டரின் காலாவதி தேதி மார்ச் 2024 என்று அர்த்தம். மறுபுறம், இது B.22 ஆக இருந்தால், உங்கள் சிலிண்டர் ஜூன் 2022 வரை இயங்கும் என்று அர்த்தம். அதன் பிறகு அதை மாற்ற வேண்டும் என்பதைக் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எரிவாயு நிறுவனங்கள் அனைத்து சிலிண்டர்களையும் அதன் காலாவதி காலத்திற்குள் கட்டாயமாக இரண்டு முறை சோதனை செய்து திறனைச் சரிபார்க்கின்றது. நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எந்த எல்பிஜி சிலிண்டரின் அதிகபட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். முதல் சோதனை 5 ஆண்டுகள் முடிந்த பிறகு நடத்தப்படும். அதேபோல், அந்த சிலிண்டரின் இரண்டாவது சோதனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும். இந்த சோதனை விவரம் தான் எண்ணெழுத்து வடிவில் உங்கள் சிலிண்டரின் மேற்புறத்தில் எழுதப்பட்டுள்ளது.
LPG Cylinder
இந்த இரண்டு சோதனை தேதிகளும் 15 ஆண்டு கடந்துவிட்டால், அந்த சிலிண்டரை பெரும்பாலும் மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. காலாவதியான சிலிண்டர்கள் எதிர்பாராத விதமாக உங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டால் உடனே அதை உரிய டெலிவரி நபரிடம் கொடுத்து மாற்றிவிடுங்கள்.