அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது, மருத்துவர்கள் ஒருவிதமான ஜெல் பயன்படுத்துகிறார்கள். அது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? அதற்கான பதில் இங்கே..
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முறையாவது அல்ட்ராசவுண்ட் (Ultrasound)செய்திரு இருக்கிறீர்களா..? ஒருவேளை நீங்கள் செய்திருக்கவில்லை என்றால், உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு கண்டிப்பாக அது நடந்திருக்க வேண்டும்.
அல்ட்ராசவுண்ட் செய்வதற்கு முன், மருத்துவர் உங்கள் வயிற்றில் ஒரு விசித்திரமான ஒட்டும் ஜெல்லைப் பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது ஏன் செய்யப்படுகிறது.. இந்த ஜெயிலின் வேலை என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? உங்களுக்குத் தெரியாவிட்டால் இந்த கட்டுரையில் அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க இப்போது அல்ட்ராசவுண்ட் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் ஜெல் பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
இதையும் படிங்க: தினமும் 8 கிளாஸுக்கு மேல் தண்ணீர் குடிச்சா ஆரோக்கியத்திற்கு ஆபத்தா..? ஆய்வுகள் சொல்வது என்ன..?
அல்ட்ராசவுண்ட் செய்யும் முன் ஜெல் எதற்கு?
உண்மையில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது, சோனார் மற்றும் ரேடியோ தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக அல்ட்ராசவுண்ட் இயந்திரம் உங்கள் உடலின் உள் பாகங்களை நேரடி படங்களாகக் காட்டுகிறது. அது சரி.. இதற்கும் ஜெல் தடவுவதற்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா..?
நாம் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது அத்தகைய ஜெல்லைப் பயன்படுத்தாவிட்டால், நோயாளியின் தோலுக்கும் அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தின் ஆய்வுக்கும் இடையில் காற்று வருவதால், அங்கு ரேடியோ மற்றும் சோனார் அலைகள் இயங்காது. ஆகவே தான், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது ஜெல் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது, உங்கள் உடலில் உள்ள பாகங்களை நேரடிப் படங்களை உருவாக்கும் அல்ட்ராசவுண்ட் இயந்திரமானது, ஜெல் தடவாவிடால் அவற்றைச் சரியாக உருவாக்காது. காரணம், அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தின் அலைகளுக்கும், நம் தோலுக்கும் இடையில் காற்று இருப்பதால் தான். அதனால்தான் மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது எப்போதுமே ஜெல்லை பயன்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தவறி கூட 'இவற்றை' சாப்பிடாதீங்க.. அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்!
அந்த ஜெல் ஆபத்தை விளைவிக்குமா?
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது பயன்படுத்தப்படும் ஜெல் ஆனது, தண்ணீர் மற்றும் ப்ரோப்பிலீன் கிளைகோலால் ஆனது. எனவே, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த விதமான தீங்கையும் விளைவிக்காது. மேலும், இந்த ஜெல் முற்றிலும் நச்சுத்தன்மையற்றது என்றும், இதில் எந்த நச்சுப் பொருளும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் நிபுணர்கள் சொல்லுகின்றனர். குறிப்பாக, இந்த ஜெல் அனைத்து வகையான தோலிலும் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
