பிக்பாஸ் வீட்டில் முளைத்த புது காதல்! பீலிங்கை ஓப்பனாக கூறிய பெண் போட்டியாளர்.. பரபரப்பான புரோமோ!
பிக்பாஸ் வீட்டில் தற்போது புதிய காதல் ஜோடி உருவாகி உள்ளது தற்போது வெளியாகியுள்ள புரோமோ மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை விட, 7-ஆவது சீசன் பரபரப்பாகவும், சண்டை - சச்சரவுகளை பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பூர்ணிமா ரவி மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம்.
இன்றைய இரண்டாவது புரோமோவில், தினேஷ், நிக்சன், பிராவோ உள்ளிட்டோர் ஆலோசனை செய்து மணிக்கு ஸ்டார் வழங்கியதால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செம்ம கடுப்பாகினர். ஏன், டைட்டில் வின்னர் விக்ரம் மற்றும் விஷ்ணுவுக்கு அந்த ஸ்டார் வழங்கவில்லை என்று கூறியதையும் பார்க்க முடிந்தது.
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், ஒரு பக்கம் தினேஷ் எதையோ நினைத்து ஃபீல் செய்து கொண்டிருக்க, மற்றொருபுறம்... விஷ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் பேசி கொண்டிருக்கும் காட்சி காட்டப்படுகிறது.
எனக்கு ஒரு பெண்ணோடு கம்பேர் செய்து பேசினால் எனக்கு கவலையே இல்லை என விஷ்ணு கூறுகிறார். எங்க வீட்டுல நான் எந்த பொண்ணை காட்டினாலும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இப்போதிக்கு சிங்கிள் தான் நான். அதுக்காக அவர் சொன்னாரு இல்ல, பொறுக்கின்னு...நான் அப்படி பொறுக்கி தனமா சுத்திகிட்டு இருக்க மாட்டேன் என்கிறார்.
பூர்ணிமா நீ யார் தான் என கேட்க, அதற்க்கு விஷ்ணு தன்னுடைய ஸ்டைலில் பதில் சொல்கிறார். இதற்க்கு பூர்ணிமா இப்போ ஒரு விஷயம் பண்றீங்க இல்ல அப்படி இருந்தால் எனக்கு பிடிச்சுருக்கு என சொல்கிறார். இதை தொடர்ந்து, நான் ஓப்பனா சொல்லட்டா... ஏதோ எனக்கு ஒரு பீலிங் இருக்கு. நான் எனக்கு தோன்றுவதை சொல்கிறேன். உங்களுக்கு இருந்தா ஓகே சொல்லலாம் இல்லனா... பிடிக்கலைனா இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிடலாம் என்கிறார். இதற்க்கு விஷ்ணு நான் எதுவுமே சொல்லலையே என்கிறார். பூர்ணிமா ஓப்பனாக தன்னுடைய ஃபீலிங்கை விஷுவிடம் கூறியுள்ளதால், அடுத்த காதல் ஜோடி பிக்பாஸ் வீட்டில் உருவாகி உள்ளதாகவே பார்க்க முடிகிறது. இது எங்க போய் முடியும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.