அனந்த் - ராதிகா கல்யாணத்தை முன்னிட்டு 50 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் அம்பானி குடும்பம் செய்து வைத்த திருமணம்!
ஆனந்த் - ராதிகா திருமணம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்பானி குடும்பத்தினர் மகாராஷ்டிராவின் பால்கரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
ரிலையஸ் குழுமத்தின் தலைவரான ஆனந்த் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் அவரது காதலி ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பு, ஜாம் நகரில்... ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி சுமார் 1000 கோடி செலவில் நடந்தது. இதில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பாலிவுட் திரையுலகில் கான் நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதை தொடர்ந்து கடந்த மாதம், கப்பலில் இரண்டாவது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் 800 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. பாலிவுட் நடிகர்கள், தொழிலதிபர்கள், உலக பணக்காரர்கள் லிஸ்டில் இருக்கும் பலர் இதில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஒவ்வொரு உடையில் பலரை வியக்க வைத்தது. இதுகுறித்த போடோஸும் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
அதே போல் கடந்த வாரம் முழுவதும் ஆனந்த் - ராதிகாவின் திருமண பத்திரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வெள்ளி மற்றும் தங்க சிலையுடன்... இடம்பெற்றிருந்த இந்த திருமண பத்திரிக்கை சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்பட்டது.
தங்கள் கடைசி மகனின் திருமண வைபோகத்தில், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி இருவரும், இன்று மகாராஷ்டிராவின் பால்கரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஜோடிகளுக்கு ஒரே இடத்தில திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க்கில் நடந்த இந்த திருமணத்தில், சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல், முகேஷ் அம்பானி - நிதா அம்பானி இருவரும் முதல் ஆளாக திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்ததோடு, அனைவருக்கும் ஆசி வழங்கி... பரிசுகள் கொடுத்த பின்னரே வெளியேறியுள்ளனர்.
இவர்களை தவிர ஈஷா அம்பானி மற்றும் அவரின் கணவர், ஆகாஷ் அம்பானி, அவரின் மனைவி சோலோகா மேத்தா, ஆனந்த் - ராதிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருமண பந்தத்தில் இணைந்த ஒவ்வொரு ஜோடிக்கும் மங்களசூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் பரிசளிக்கப்பட்டன. அவர்கள் கால் மோதிரங்கள் மற்றும் கொலுசு போன்ற வெள்ளி ஆபரணங்களும் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் 1.01 லட்சம் ரூபாய்க்கான காசோலை அவர்களின் சீராக வழங்கினார் நிதா அம்பானி.
இது மட்டும் இன்றி ஒவ்வொரு ஜோடிக்கும், ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களைப் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி போன்ற உபகரணங்கள், அத்துடன் மெத்தை மற்றும் தலையணைகள் ஆகியவை அடங்கும்.
திருமண தம்பதிகளை வந்து வாழ்த்திய அனைவருக்கும் பல வகை பதார்த்தங்களுடன்... அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதே போல் சிலர் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பரிசு, பணம் போன்றவற்றை கொடுத்து வாழ்த்தினர்.
நிதா அம்பானி அங்கிருந்த ஒவ்வொரு தம்பதியிடமும் சென்று அன்பாக பேசியதோடு... கட்டி தழுவி தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார். இவரின் கால்களில் பலர் விழுந்து ஆசி பெரும் சம்பவங்களும் நடந்தது. தம்பதிகள் இடையே அவர்கள் திருமண வழக்கப்படி நடக்கும்... பொட்டு வைக்கும் சடங்கு, மெட்டி போடும் சடங்கு போன்றவை நடந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் ராஜூக்கு அடித்த ஜாக்பார்ட்! 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்!