- Home
- Gallery
- 'திருமலை' படம் விஜய்க்கு எழுதிய கதையே இல்லை! இவரை தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... 21 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!
'திருமலை' படம் விஜய்க்கு எழுதிய கதையே இல்லை! இவரை தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... 21 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!
பிரபல இயக்குனர் ரமணா, விஜய் நடித்த அந்த திருமல படம் அவருக்காக எழுதப்பட்ட கதை இல்லை என்கிற தகவலை 21 வருடங்களுக்கு பின்னர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பல சமயங்களில் இயக்குனர் ஒரு ஹீரோவை நினைத்து கொண்டு கதையை எழுத, அதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அப்படி அஜித்தை மனதில் வைத்து கொண்டு எழுதிய கதையில், விஜய் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என இயக்குனர் ரமணா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ரமணா இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து 2003-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'திருமலை'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். நியூ இயர் அன்று, தனக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் ஜோதிகாவை பைக் மெக்கானிக்காக விஜய் துரத்தி துரத்தி காதலிப்பது தான் இந்த படத்தின் கதை களம்.
ஒரு கட்டத்தில் ஜோதிகாவும், மெக்கானிக்காக விஜயை காதலிக்க... தன்னுடைய காதலுக்கு விஜய் எந்த அளவுக்கு போராடுகிறார். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
சுமார் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், 39 கோடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் கௌசல்யா, ரகுவரன், மனோஜ் கே ஜெயன், அவினாஷ், கருணாஸ், போண்டா மணி, பசி சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி சுமார் 21 வருடங்கள் ஆகும் நிலையில்... இந்த படத்தின் கதை அஜித்துக்கு எழுதப்பட்டது என்கிற ரகசியத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ரமணா. இந்த படம் வெளியான பின்னர், வெளியில் அஜித்தை மீட் பண்ணும் போது, இதுகுறித்து அவரிடம் சொன்னேன். அவர் என்ன சார் சொல்றீங்கனு கேட்டாரு.
அதற்க்கு நான் ஆமா சார், ஹீரோ ஒரு மெக்கானிக், பைக் ரேஸ் ஓட்டுவாரு, லவ் பன்றாரு... இது உங்களின் கேரக்டர் இல்லாம வேறு யாரு என கேட்டாராம். எதேர்சையாக தான் ரமணா தளபதியிடம் இப்படத்தின் ஒன் லைன் கூற அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படி தான் அஜித்துக்கு எழுதிய கதையின் உள்ளே விஜய் வந்துள்ளார்.