- Home
- Gallery
- Varalaxmi Sarathkumar Pre-Wedding: தேவதை போல் இருக்கும் வரலட்சுமி அழகில் சொக்கி போன நிக்கோலாய்! வைரல் போட்டோஸ்
Varalaxmi Sarathkumar Pre-Wedding: தேவதை போல் இருக்கும் வரலட்சுமி அழகில் சொக்கி போன நிக்கோலாய்! வைரல் போட்டோஸ்
நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமண கொண்டாட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக அமோகமாக நடந்து வரும் நிலையில், வரு - நிக்கோலாய் ப்ரீ வெட்டிங் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் சரத்குமார். இவரின் மூத்த மகளான வரலட்சுமி விஷாலுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்னர் திருமணமே வேண்டாம் என இருந்த நிலையில், ஒருவழியாக கடந்த மார்ச் மாதம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள உள்ளதை அறிவித்தார்.
வரலட்சுமி - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதில் வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் மற்றும் நிக்கோலாய் பெற்றோர் மற்றும் சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்கு பின்னர், நிக்கோலாய் உடன் டேட்டிங் செய்து வந்த வரு... பின்னர் கடந்த ஒரு மாதமாக பிரபலங்களுக்கு திருமண பத்திரிக்கை வைப்பதில் பிஸியானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், என ரவுண்டு கட்டி பல தென்னிந்திய திரையுலகில் நடித்து வந்த வரு தனக்கு நெருக்கமான அனைத்து முன்னணி பிரபலங்களுக்கும் தேடி சென்று பத்திரிக்கை வைத்தார்.
வரலட்சுமியுடன் அவரின் அப்பா சாத்குமார் மற்றும் சித்தி ராதிகா தான் சென்றனர். இந்நிலையில் நிக்கோலாய் - வரலட்சுமியின் திருமணம் கொண்டாட்டங்கள் கடந்த சில தினங்களாக களைகட்டி உள்ளன. முதலில் இந்த ஜோடியின் மெஹந்தி பங்க்ஷன் நடைபெற்ற நிலையில், நேற்று சங்கீத் பங்க்ஷன் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
வரலட்சுமியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதுகுறித்த போட்டோஸ் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்த புகைப்படங்களில் வரலட்சுமி ஜொலிக்கும் உடையில் தேவதை போல் மிளிர்கிறார். நிக்கோலாய் வரலட்சுமியின் அழகில் மயங்கி... அவருடன் சேர்ந்து பிரபலங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் ராஜூக்கு அடித்த ஜாக்பார்ட்! 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்!
இதை தொடர்ந்து நாளைய தினம் வரலட்சுமிக்கு தாய்லாந்தியில் தென்னிந்திய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் ரிசப்ஷன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரலட்சுமி - நிக்கோலாய் ப்ரீ வெட்டிங் ரிசப்ஷனில் போது எடுக்கப்பட்ட போட்டோஸ்... வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கும் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள வரலட்சுமிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.