- Home
- Gallery
- கொளுத்தும் வெயிலில்... மனசாட்சியே இல்லாமல் விரட்டினார் அமலா பால்..! மேக்கப் கலைஞர் பகிர்ந்த ஷாக் தகவல்!
கொளுத்தும் வெயிலில்... மனசாட்சியே இல்லாமல் விரட்டினார் அமலா பால்..! மேக்கப் கலைஞர் பகிர்ந்த ஷாக் தகவல்!
பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஹேமா, நடிகை அமலா பால் படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் குறித்து.... அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் இருந்து வந்து, ஆரம்பத்திலேயே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத படமான 'சிந்து சமவெளி' படத்தில் நடித்து, ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் அமலா பால். இப்படி ஒரு மோசமான கதையில் நடித்த அமலா பால் இனி தமிழில் படங்கள் நடிக்கவே கூடாது என பிரச்சனை சென்ற நிலையில்... பின்னர் மெல்ல மெல்ல இந்த பட பிரச்சனை ஓய்ந்தது.
'சிந்து சமவெளி' காலை வாரினாலும், இந்த படத்தை தொடர்ந்து அமலாபால் தேர்வு செய்து நடித்த 'மைனா' திரைப்படம், அமலா பால் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படியே மெல்ல... மெல்ல... ஏறுமுகத்தை சந்தித்த அமலாபால், தனுஷ், விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் திருமணம் செய்த வேகத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் அமலா பாலின் ஏ.எல்.விஜய் குடும்பத்தினரிடம் நடந்து கொண்ட விதம் என கூறப்படுகிறது.
முதல் கணவரை பிரிந்த அமலா பால்... 5 வருடங்கள் சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நீண்ட நாள் காதலரான ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது அமலா பால் கர்ப்பமாக இருந்தார். மேலும் அமலா பால் - ஜகத் தேசாய் ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய தாய்மை காலத்தை குழந்தையோடு அனுபவித்து வரும் அமலா பால், பற்றி வட இந்திய மேக்கப் ஆர்டிஸ்ட் ஹேமா கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Amala Paul
அதாவது நடிகை அமலா பால் நடித்து வந்த படப்பிடிப்பு, வெயில் காலத்தில் நடந்ததாகவும்... அங்கு நிழலுக்கு ஒதுங்குவதற்கு கூட எந்த இடமும் இல்லை. வெயில் தாங்க முடியாமல் கேரவனில் போய் அமர்ந்திருந்த போது, அமலா பால் தன்னுடைய மேனேஜர் மூலம் கீழே இறங்க சொல்லி தங்களை விரட்டியதாக கூறியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இது போல் பல பிரச்சனைகளை சந்தித்ததாக ஹேமா கூறியுள்ளார்.
நடிகர் - நடிகைகளை கேமரா முன் அழகாக காட்டுவதில், சிகை அலங்காரம் செய்பவர்களுக்கும், மேக்கப் ஆர்டிஸ்டுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு, எனினும் இதுபோன்ற சில நடிகைகள் தங்களை மனிதர்களாக கூட பார்ப்பதில்லை என கூறியுள்ள ஹேமா, நடிகை தபு போன்ற மூத்த நடிகைகள்... எங்களை போன்றவர்களை நன்கு பார்த்து கொள்வதோடு, வெயிலில் இருந்து எங்களை பாதுகாக்கும் விதமாக வேன் போன்ற்வற்றை புக் செய்து கொடுப்பார் என கூறியுள்ளார்.