- Home
- Gallery
- வரலட்சுமி சரத்குமார் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு மனைவியுடன் வந்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார்! வைரலாகும் போட்டோஸ்
வரலட்சுமி சரத்குமார் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு மனைவியுடன் வந்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார்! வைரலாகும் போட்டோஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய நண்பர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின், ப்ரீ வெட்டிங் நிகழ்சியில் மனைவியுடன் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

மூத்த நடிகர், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் வெகு விமர்சியாக நடந்த நிலையில், இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.
கடந்த மாதம் தான் பிரபல நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி, திருமணம் நடந்து முடிந்தது. சென்னை கொலப்பாக்கத்தில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் திருமணம் மிக விமர்சியாக நடந்தாலும், பிரைவஸி காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த ரிசப்ஷனில் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணம் முடிந்த சில தினங்களிலேயே... வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண ஏற்பாடுகள் களைகட்ட துவங்கியுள்ளன. மெஹந்தி, ஹல்தியை தொடர்ந்து நேற்று இரவு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடந்தது இதில், த்ரிஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தாஜ் ஹோட்டலுக்கு மனைவி லதா ரஜினிகாந்துடன் வருவதும்... மணமக்களை வாழ்த்திய பின்னர், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட சில போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.