Crime news: என் பொண்டாட்டிய என்கூட அனுப்ப மாட்டியா.. நள்ளிரவில் மாமியாரை அலறவிட்ட மருமகன்.. நடந்தது என்ன?
மாமியாரை மருமகன் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர்கள் சரவணன். இவரது மனைவி மகாதேவி. இவர்களது 3வது மகளை மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், பிரபுவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
sivagangai
இதனால், கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு மாமியார் தடையாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மீண்டும் மனைவியை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு பிரபு வந்துள்ளார். மாமியார் கண் அசந்த நேரத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு பிரபு வெளியே செல்ல முயன்றபோது இதை பார்த்த மாமியார் மகாதேவி அலறி கூச்சலிட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. மேலும், மகளை அனுப்ப மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை பலமுறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து காளையார் கோயில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். பின்னர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மருமகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.