போதை தலைக்கேறினா இப்படி கூடவா செய்வாங்க.! டிரைவரை கடித்து வைத்த திமுக நிர்வாகி.. எந்த இடத்தில் தெரியுமா?
பொள்ளாச்சி அருகே மினி வேன் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கடித்து வைத்த திமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பைசல். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணியின் இணைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் தனது மினி ஆட்டோவை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் வந்த பைசல் யாரை கேட்டு இங்கு வண்டியை நிறுத்தியது என கூறிவிட்டு நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றை பிடுங்கி விட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- Tamilnadu Rain: 3 மணிநேரத்துல இந்த 18 மாவட்டங்களை அலறவிடப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்..!
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தத இளையராஜா எதற்காக வண்டியின் காற்றை திறந்து விட்டீர்கள் என பைசலிடம் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த பைசல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பலமாக தாக்கி நெஞ்சு பகுதியில் கடித்து வைத்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த இளையராஜா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இளையராஜா ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பைசலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- பிஎச்டி படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!