Asianet News TamilAsianet News Tamil

பிஎச்டி படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D)பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ, ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Incentives for Adi Dravidar and tribal students studying for Ph.D.. Tamil Nadu government announcement tvk
Author
First Published Nov 22, 2023, 8:08 AM IST | Last Updated Nov 22, 2023, 8:11 AM IST

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் (பிஎச்டி) மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D)பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ, ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிங்க;- Chennai Rain: சென்னையில் விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு.!

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம், https://www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5:45 மணிக்குள், ”இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை 600005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வி ஆண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios