Chennai Rain: சென்னையில் விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு.!
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Chennai Rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கிண்டி, மந்தைவெளி, சேத்துப்பட்டு, சாந்தோம், எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினபாக்கம், போரூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட நேரங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை 8.30 மணிமுதல் தற்போது 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில், கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!
இதனிடையே, கனமழையின் காரணமாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகள் வழக்கு போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.