விஷால் மனைவியாக நான்... என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சு - திருமண சர்ச்சை குறித்து நடிகை அபிநயா ஓபன் டாக்
விஷாலின் தீவிர ரசிகையான தனக்கு மார்க் ஆண்டனி படத்தில் அவரது மனைவியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன் வாழ்நாள் கனவு நனவாகி உள்ளதாக நடிகை அபிநயா கூறி உள்ளார்.
abhinaya, vishal
அபிநயா தற்போது விஷாலுடன் `மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து இருக்கிறார். இதில் விஷாலின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அபிநயா. அதில். தான் விஷாலின் தீவிர ரசிகை என்றும், அவருடன் இணைந்து பணியாற்றுவதும், அவரை சந்திப்பதும் தனது கனவு என்றும் அவர் கூறியுள்ளார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்தக் கனவு நனவாகியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
abhinaya anand
தொடர்ந்து பேசிய அவர், சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்தின் ரசிகை என்றும், பிறகு விஷாலின் ரசிகை என்றும் கூறினார். விஷாலின் முதல் படமான செல்லமே பார்த்துவிட்டு விஷாலின் ரசிகையாக மாறியதாகவும், அவரை வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும் கூறினார். மேலும், ‘பூஜை' படத்தில் நடித்தாலும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்றார்.
இதையும் படியுங்கள்... நல்ல வேள என்னோட அனகோண்டாவுக்கு எதுவும் ஆகல... சர்ச்சைக்குரிய டயலாக்கின் பின்னணி என்ன? விஷால் விளக்கம்
abhinaya
‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அவரது மனைவியாக நடித்துள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் விஷாலை முதல்முறையாகச் சந்தித்தேன். என் கனவு நனவான நாள் அது. மிக்க மகிழ்ச்சி. விஷாலுக்கு கோபம் அதிகம் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த பிறகு தான் அவர் எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்தேன். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவார். அனைவரையும் சமமாக நடத்துவார் என்றார்.
abhinaya about marriage rumours with vishal
இறுதியாக, விஷாலுடனான திருமண வதந்திகள் குறித்து மீண்டும் ஒருமுறை பதிலடி கொடுத்துள்ளார் அபிநயா, அதுபற்றி பேசுகையில், நானும் விஷாலும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற செய்தி பல நாட்களாகக் கேள்விப்பட்டு வருகிறேன். அதில் உண்மை இல்லை'' எனக் கூறினார் அபிநயா. விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இம்மாதம் 15ந் தேதி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... கனவுபோல் உள்ளது... புது கார் வாங்கிய குஷியில் குக் வித் கோமாளி மோனிஷா - அதோட விலை இத்தனை லட்சமா?