கிறிஸ்துமஸ் வந்தாச்சு.. 2ம் வருட கொண்டாட்டத்தில் இளம் ஜோடி - ஹப்பியுடன் வீட்டை அலங்கரிக்கும் மஞ்சிமா மோகன்!
Manjima Mohan and Gautham Karthick : பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் இவர் என்பது அனைவரும் அறிந்ததே.
Actress Manjima
பல நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் கதை அம்சத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும், கௌதம் கார்த்திக் அவர்களுக்கு இன்றளவும் ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் திரைப்படமாக எந்த திரைப்படமும் அமையவில்லை என்றே கூறலாம். இறுதியாக அவர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆகஸ்ட் 16 1947 என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Christmas Celebration
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபல நடிகை மஞ்சிமா மோகன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கௌதம் கார்த்திக். இரு வீட்டார் சமூகத்துடன் இந்த திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த ஜோடி தற்பொழுது தங்கள் இரண்டாவது வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.
Gautham Karthick
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அதன் பிறகு கடமை 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். இறுதியாக தமிழில் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான "BOO" என்கின்ற திரைப்படத்தில் நடித்த இவர் தற்பொழுது நடிப்பிலையில் இருந்து சற்று விலகி இருக்கிறார்.
Gautham Karthick and Manjima
இந்நிலையில் தங்கள் இரண்டாம் ஆண்டு கிறிஸ்துமஸ்தியை கொண்டாட உள்ள இந்த இளம் ஜோடிகள், தங்கள் வீட்டை வண்ண விளக்குகள் கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.