சாரி.. துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் பண்ண முடியல.. ஆனா.. GVM போட்ட ட்வீட் - பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram Postponed : பல வருட போராட்டங்களுக்குப் பிறகு இன்று நவம்பர் மாதம் 24 ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது அந்த படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dhruva Natchathiram Postponed Director Gautham Vasudev Menon Shares Emotional Post ans

கடந்த 2013 ஆம் ஆண்டில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் துருவ நட்சத்திரம், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், முதலில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்ததாகவும். அதன் பிறகு சில பிரச்சனைகளால் அவர் படத்தில் இருந்து விலகிய நிலையில், 2015ம் ஆண்டு தான் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இணைந்ததாகவும் சில தகவல்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கி சுமார் 90 சதவீத வேலைகள் முடிந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்று போனது. அதன் பிறகு பல போராட்டங்களை சந்தித்து, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களே தனது சொந்த தயாரிப்பில் இந்த திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தார்.

Vijay: 'லியோ' பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தளபதி! வைரலாகும் போட்டோஸ்..!

இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த பணிகள் முடிக்கப்பட்டு, இன்று நவம்பர் 24ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட து. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் தற்பொழுது துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வெளியிட்ட பதிவில் "என்னை மன்னித்து விடுங்கள், இன்று துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு நாட்கள் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள், நிச்சயம் இந்த திரைப்படம் உங்களுடைய பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios