MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மணிமேகலை முதல் சைத்ரா ரெட்டி வரை... வரிசையாக புதுப்புது சொகுசு கார்களை வாங்கி அடுக்கும் சின்னத்திரை பிரபலங்கள்

மணிமேகலை முதல் சைத்ரா ரெட்டி வரை... வரிசையாக புதுப்புது சொகுசு கார்களை வாங்கி அடுக்கும் சின்னத்திரை பிரபலங்கள்

மணிமேகலை, சைத்ரா ரெட்டி, ரச்சிதா மகாலட்சுமி, தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் என சின்னத்திரை பிரபலங்கள் வாங்கியுள்ள சொகுசு கார்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 11 2024, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Thaadi Balaji car

Thaadi Balaji car

தாடி பாலாஜி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டது மட்டுமின்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றிய நடிகர் தாடி பாலாஜி சொந்தமாக பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வைத்திருக்கிறார்.

29
Hussain Manimegalai Car

Hussain Manimegalai Car

மணிமேகலை

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேமஸ் ஆனவர் மணிமேகலை. இவர் தனது கணவர் ஹுசைன் உடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் இந்த ஜோடி சொந்தமாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

39
Erode Mahesh Car

Erode Mahesh Car

ஈரோடு மகேஷ்

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி கலக்கியவர் ஈரோடு மகேஷ். இவர் விஜய் டிவியில் ஒல்லி பெல்லி உள்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் சொந்தமாக பென்ஸ் கார் வைத்திருக்கிறார்.

49
Shivani Car

Shivani Car

ஷிவானி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் அறிமுகமானவர் ஷிவானி. பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்த அவர், பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டு பேமஸ் ஆன பின் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவரும் சொந்தமாக பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கிறார்.

59
jacqueline Car

jacqueline Car

ஜாக்குலின்

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி கலக்கியவர் ஜாக்குலின். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்திய ஜாக்குலினிடமும் பிஎம்டபிள்யூ கார் ஒன்று உள்ளது.

69
Rachitha Car

Rachitha Car

ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களின் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரச்சிதார். இவர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் அண்மையில் எம்ஜி கார் ஒன்றை சொந்தமாக வாங்கினார் ரச்சிதா.

79
Gabriella Charlton Car

Gabriella Charlton Car

கேப்ரியல்லா

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கேப்ரியல்லா தற்போது சீரியலில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் சீசனில் நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள மருமகள் என்கிற தொடரில் நடிக்கிறார். இவரும் கடந்த ஆண்டு டாட்டா ஹாரியர் காரை சொந்தமாக வாங்கினார்.

89
chaitra reddy new car

chaitra reddy new car

சைத்ரா ரெட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து கலக்கி வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் அண்மையில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் ஈ கிளாஸ் சொகுசு காரை வாங்கி இருந்தார். 

99
sunita gogoi car

sunita gogoi car

சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் சுனிதா. இவர் சொந்தமாக லெக்சஸ் கார் ஒன்றை வைத்திருக்கிறார். அந்த காரின் விலை ரூ.18 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved