MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தியேட்டரில் ரஜினி படத்தையே பதம் பார்த்த மணிகண்டனின் ‘லவ்வர்’... ஓடிடிக்கு வருகிறது - எப்போ ரிலீஸ் தெரியுமா?

தியேட்டரில் ரஜினி படத்தையே பதம் பார்த்த மணிகண்டனின் ‘லவ்வர்’... ஓடிடிக்கு வருகிறது - எப்போ ரிலீஸ் தெரியுமா?

மணிகண்டன் நடிப்பில் காதலர் தினத்தை ஒட்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற லவ்வர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2024, 09:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lover, Lal salaam

Lover, Lal salaam

தமிழ் சினிமாவின் அடுத்த விஜய் சேதுபதியாக கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது மணிகண்டன் தான். விஜய் சேதுபதி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் எப்படி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தாரோ, அதேபோல் மணிகண்டனும் சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில்லு கருப்பட்டி, ஜெய் பீம், குட் நைட் ஆகிய மூன்று படங்களுமே வேறலெவல் ஹிட் அடித்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Lover movie clash with Lal salaam

Lover movie clash with Lal salaam

இதனால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தான் லவ்வர். இப்படம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ரஜினியின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக திரைக்கு வந்தது. ரொமாண்டிக் திரைப்படமான இதை பிரபுராம் வியாஸ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... விடிவி முதல் ராட்சசன் வரை... நடிகர் ஜெய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் மட்டும் இத்தனையா?

34
Rajinikanth, Manikandan

Rajinikanth, Manikandan

ரஜினி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனதால் லவ்வர் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் கம்மியான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் போகப்போக படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்ததால் அப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் ரஜினியின் லால் சலாம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களை எல்லாம் ஆக்கிரமிக்க தொடங்கிய லவ்வர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது.

44
Lover Movie OTT release

Lover Movie OTT release

இந்த நிலையில், லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற லவ்வர் திரைப்படம் ஓடிடியிலும் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved