MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விடிவி முதல் ராட்சசன் வரை... நடிகர் ஜெய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் மட்டும் இத்தனையா?

விடிவி முதல் ராட்சசன் வரை... நடிகர் ஜெய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் மட்டும் இத்தனையா?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஜெய், விண்ணைத்தாண்டி வருவாயா, ராட்சசன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2024, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
jai

jai

பகவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அப்படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக நடித்திருந்த ஜெய், அதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படம் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து சசிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜெய். அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Subramaniapuram

Subramaniapuram

இதையடுத்து ராஜா ராணி, வாமனன், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற ஹிட் படங்களில் ஜெய் நடித்திருந்தாலும், அவர் கோலிவுட்டில் தவறவிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் லிஸ்டை கேட்டால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள். ஏனெனில் அவர் நடிக்க மறுத்த படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட வெற்றிப்படங்கள். அது என்னென்ன படங்கள், எதற்காக அதில் ஜெய் நடிக்க மறுத்தார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

35
Actor Jai Rejected Movies

Actor Jai Rejected Movies

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து ஹிட்டான நாடோடிகள் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ஜெய் தானாம். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனதாம். அதேபோல் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்கும் போதே சிவா மனசுல சக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். சுப்ரமணியபுரம் படத்துக்காக தாடி வைத்திருந்ததால் அதை எடுக்க முடியாத சூழல் உருவானது அதனால் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

45
VTV

VTV

அதேபோல் சிம்புவின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக திகழ்ந்து வருவது விண்ணைத்தாண்டி வருவாயா, அப்படத்தில் ஹீரோவாக நடிக்க கவுதம் மேனன் முதலில் அணுகியது நடிகர் ஜெய்யை தானாம். திரிஷாவுக்கு ஜோடி, ஏ.ஆர்.ரகுமான் இசை என பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் அந்த சமயத்தில் வரிசையாக மூன்று படங்களில் கமிட் ஆனதால் விடிவி படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். 

55
Raatsasan

Raatsasan

இறுதியாக ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் அடித்த ராட்சசன் படத்திலும் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது ஜெய் தானாம். அதில் போலீஸ் கெட் அப்பில் நடிப்பதற்காக அவரை தயார் படுத்த சுமார் 6 மாதங்கள் ஜெய் உடன் பயணித்தாராம் ராம் குமார். ஆனால் தயாரிப்பாளர் மாறியதால் அப்படத்தில் இருந்து நடிகர் ஜெய் விலக நேர்ந்ததாம். இப்படி நான்கு முத்தான படங்களை நடிகர் ஜெய் மிஸ் பண்ணியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Ajith Photo: மருத்துவமனையில் இருந்து வந்த பின்னர் அஜித் எப்படி இருக்காருன்னு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved